நெல்லிக்காய் பொடியுடன் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்தால் இந்த மேஜிக்: டாக்டர் சகுல்
நெல்லிக்காயில் ஏராளமான மருத்துவ பயன்கள் இருப்பதாக கூறியுள்ள மருத்துவர் சகுல், அதற்கான அறிவியல்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளார். அவற்றை இக்குறிப்பில் பார்க்கலாம்.
100 கிராம் நெல்லிக்காயில் சராசரியாக 10 கிராம் கார்போஹைட்ரேட், 1 கிராம் புரதம், 0.5 கிராம் கொழுப்பு, 4.5 கிராம் நார்ச்சத்து, 45 கலோரிகள் இருப்பதாக மருத்துவர் சகுல் தெரிவித்துள்ளார். இவை மட்டுமின்றி வைட்டமின் ஏ, சி, இ, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீஷியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் நெல்லிக்காயில் நிறைந்திருக்கின்றன.
Advertisment
நெல்லிக்காய் பொடியை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தலைக்கு தேய்த்தால், பொடுகு தொல்லைகள் நீங்கும் என மருத்துவர் சகுல் கூறுகிறார். மேலும், இளநரை பிரச்சனையையும் இது கட்டுப்படுத்துகிறது. முடியின் வேர்ப்பகுதியையும் இது வலுப்படுத்துகிறது. மேலும், முடி உதிர்வு பிரச்சனையையும் நெல்லிக்காய் கட்டுப்படுத்தும் என அவர் அறிவுறுத்துகிறார். எனவே, நெல்லிக்காயை சாப்பிடுவதும், அவற்றை பொடியாக்கி தலைமுடியில் தேய்ப்பதும் நல்லது என மருத்துவர் சகுல் குறிப்பிட்டுள்ளார்.
தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை அடிக்கடி ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் நெல்லிக்காயில் இருக்கிறது. ஏற்கனவே சளி பிடித்தவர்களுக்கும் நெல்லிக்காய் ஜூஸ் கொடுத்தால், அவை சீக்கிரம் குணமாகும் என மருத்துவர் சகுல் அறிவுறுத்தியுள்ளார்.
நெல்லிக்காயை தினசரி சாப்பிடுவதன் மூலம் செரிமான மண்டலத்தை சீரமைக்க முடியும். குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை நெல்லிக்காய் ஊக்குவிக்கிறது. மேலும் இதில் இருக்கக் கூடிய நார்ச்சத்து, செரிமானத்தை எளிதாக்குகிறது.
Advertisment
Advertisement
அதன்படி, இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காயை சரியான முறையில் பயன்படுத்தினால் தலைமுடி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என மருத்துவர் சகுல் அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.