மதியம் தூங்குவது ஆரோக்கியமானதா? டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் அட்வைஸ்

மதிய நேரத்தில் தூங்குவது ஆரோக்கியமானதா என்பதற்காக விளக்கத்தை மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் தெரிவித்துள்ளார். அதனை இந்த செய்தி குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.

மதிய நேரத்தில் தூங்குவது ஆரோக்கியமானதா என்பதற்காக விளக்கத்தை மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் தெரிவித்துள்ளார். அதனை இந்த செய்தி குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Afternoon nap

இன்றைய சூழலில் பெரும்பாலானவர்களுக்கு இரவு நேரத்தில் கூட சரியாக தூக்கம் வருவதில்லை. ஆனால், பலருக்கு மதியத்தில் தூக்கம் வருவதாக கூறுகின்றனர். இதற்கான விளக்கத்தை மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஒவ்வொரு மனிதருக்கும் செர்கேடியன் ரிதம் இருக்கிறது என்று அவர் கூறுகிறார். இதன் காரணத்தினால் இரண்டு சூழலில் தூக்கம் வருகிறது. குறிப்பாக, மதியம் மற்றும் இரவில் தூக்கம் வருவதற்கு இது காரணமாக அமைகிறது என்று மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் அறிவுறுத்துகிறார்.

எனவே, மதிய நேரத்தில் தூக்கம் வருவது இயற்கையானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தூக்கத்தை பொறுத்தவரை நான்கு நிலை இருக்கிறது. மெல்லிய தூக்கம் (Light sleep), இளைப்பாறும் தூக்கம் (Relaxation sleep) ஆகிய இரண்டும் 30 நிமிடங்களில் முடிந்து விடும்.

அடுத்த நிலை புத்துணர்ச்சி அளிக்கும் தூக்கம் (Restorative sleep) என்றும், இறுதி நிலை விரைவான கண் அசைவு தூக்கம் (Rapid eye movement sleep) என்றும் அழைக்கப்படுகிறது என மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இந்த இறுதி நிலையில் தான் கனவுகள் வருகிறது என்றும், அதன் பின்னர் நாம் விழித்துக் கொள்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

இரவு 8 மணி நேரம் உறங்கும் போது நமக்கு நான்கு விதமான உறக்க நிலையும் கிடைக்கிறது. அந்த வகையில், மதியம் தூங்கும் போது 20 முதல் 30 நிமிடங்களில் எழுந்து விட வேண்டும் என்று மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இல்லையெனில், 90 நிமிடங்களுக்கு அலாரம் வைத்து முழுமையான தூக்க நிலையை அடைந்து விழித்துக் கொள்ளலாம். 

மேலும், இரவு எத்தனை மணிக்கு தூங்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக மதிய நேரத்தில் தூங்கி எழுந்து விடலாம் என்று மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் பரிந்துரைக்கிறார். 

நன்றி - Dr Santhosh Jacob Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Best tips to maintain healthy sleep

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: