என்ன செய்தால் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவர் செங்கோட்டையன் டாக்டர் எஸ்.ஜே. ஹாட் டிவி யூடியூப் பக்கத்தில் கூறி இருப்பதாவது,
அதற்கு முதலில் நம் வாழ்வில் ஐந்து விஷயங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் ஐந்து விஷயங்களை கூட்டிக் கொள்ள வேண்டும் அது பற்றி தான் அவர் கூறுகிறார்.
தவிர்க்க வேண்டியவை
1.சோடியத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பு பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அதிகமாக இருப்பதால் இவை அனைத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
2.மன அழுத்தம் டென்ஷன் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
3. உடல் எடையை குறைக்க வேண்டியது அவசியம். வயது அதிகரிக்க உடல் எடை அதிகரிக்க ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே வயதுக்கேற்ற உடல் எடை கட்டாயம் இருக்க வேண்டும். உடல் எடையில் அக்கறை அதிகம் தேவை.
4. கொலஸ்ட்ரால் கொழுப்பு மிக்க உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும் போது ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டத்திற்கான அழுத்தம் குறைகின்றது. எனவே கொழுப்பு சார்ந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
5. மது அருந்துதல், புகைபிடித்தல் பழக்கங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த மாதிரியான பழக்கம் அதுவும் எந்த அளவிலான மது புகைப்பிடித்தல் பழக்கம் இருந்தாலும் அவை ரத்த ஓட்டத்தை பாதிக்கும். எனவே இவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அதிகரிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்:
1. பொட்டாசியம் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கொட்டை உணவு வகைகள், கீரைகள் போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
2. கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த ஓட்டத்தை சீராக்கவும். இதயத்திற்க்கான வேலைபாடுகளை குறைக்கவும் இது உதவும். ராகி அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதயம் 100 ஆண்டுகள் இலகுவாக செயல்பட இதை செய்தால் போதும் HIGH BP DOs and DONTs Remedy in Tamil
3. நடைப்பயிற்சி ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடம் வாக்கிங் ஓட்டம் உடற்பயிற்சி மேற்கொள்வது இதயத்திற்கு நல்லது.
4. தூக்கம் எந்த சிந்தனையும் இல்லாமல் ஒரு ஆழ்ந்த உறக்கம் ஆறு முதல் 8 மணி நேரம் கட்டாயம் தேவை. இரவில் நல்ல உறக்கம் இருக்க வேண்டும்.
5. பலதரப்பட்ட உணவுகளை எடுக்க வேண்டும் தானியங்கள், பச்சை காய்கறிகள், கீரைகள், முட்டைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் தினசரி செய்து வருவதால் இதயத்திற்கான ஆற்றல் அதிகரிக்கும், அழுத்தம் குறையும், ரத்த ஓட்டம் சீராகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.