'4 ஆண்டுகளாக இவற்றை ஃபாலோ செய்கிறேன்'; டாக்டர் ஷர்மிகா சொல்லும் லைஃப்ஸ்டைல் டிப்ஸ்
மருத்துவர் ஷர்மிகா, கடந்த 4 ஆண்டுகளாக தான் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை குறித்து விவரித்துள்ளார். இவற்றின் மூலம் தன் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர் ஷர்மிகா, கடந்த 4 ஆண்டுகளாக தான் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை குறித்து விவரித்துள்ளார். இவற்றின் மூலம் தன் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை ஆகியவற்றின் மூலமாக ஆரோக்கியமான வாழ்க்கையை நம்மால் அடைய முடியும்.
Advertisment
தொடக்கத்தில் இவை அனைத்தையும் பின்பற்றும் போது சிரமமாக தோன்றலாம். ஆனால், ஒரு கட்டத்தில் இவை அனைத்துமே நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி விடும். அதன் பின்னர், இவற்றை பின்பற்றாமல் நம்மால் ஒரு நாள் கூட இருக்க முடியாது.
எனினும், எத்தகைய பழக்க வழக்கங்களை நம் வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும். அதற்கான விடையை மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளாக அவர் பின்பற்றி வரும் சில பழக்க வழக்கங்கள் குறித்து நம்மிடையே கூறுகிறார். இவற்றின் மூலம் தன்னுடைய ஆரோக்கியம் மேம்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இதில் முதல் விஷயமாக ஒரு நாளைக்கு இரண்டு வேளை குளிக்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். இதன் மூலம் நாம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன் சருமம் தொடர்பான பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். இரண்டாவதாக, இரண்டு முறை பல் தேய்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
மூன்றாவதாக, காலை எழுந்ததும் தண்ணீர் குடித்த பின்னர் கட்டாயமாக ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். அடுத்தபடியாக, சாப்பிடும் போது நம் வாயை கட்டாயம் மூடி வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இதனை கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், பலரும் தாங்கள் சாப்பிடும் போது வாயை திறந்து வைத்து உண்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7500 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா வலியுறுத்துகிறார். குறிப்பாக, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் கட்டாயமாக நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது தவிர அன்றைய நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை காலையில் எழுதி வைக்க வேண்டும். இரவில் வீடு திரும்பியதும், அவற்றில் எந்த விஷயங்களை எல்லாம் முடித்தோம் என்று டிக் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாரத்தில் 5 நாட்களாவது இரவு 10 மணிக்கு தூங்கி விட வேண்டும். தூக்கத்தை சரியாக சீரமைத்துக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். மேலும், சாப்பிடும் போது அரை வயிறு உணவு மட்டுமே தான் எடுத்துக் கொள்வதாக அவர் கூறுகிறார். இவை மட்டுமின்றி நமக்கு தேவையில்லாத விஷயங்களுக்கு நோ சொல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இந்த அனைத்து பழக்கங்களையும் பின்பற்றும் போது நம் வாழ்க்கை தரம் மேம்படுவதுடன், ஆரோக்கிய பயன்களும் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.