இந்த 6 பழக்கங்களை ஃபாலோ செய்தால் போதும்; உங்கள் ஆரோக்கியம் மேம்படும்: டாக்டர் ஷர்மிகா டிப்ஸ்

மருத்துவர் ஷர்மிகா, தான் தொடர்ச்சியாக பின்பற்றி வரும் ஆறு பழக்க வழக்கங்களை தெரிவித்துள்ளார். இவற்றை அவர் பின்பற்றத் தொடங்கியதில் இருந்து அவருடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.

மருத்துவர் ஷர்மிகா, தான் தொடர்ச்சியாக பின்பற்றி வரும் ஆறு பழக்க வழக்கங்களை தெரிவித்துள்ளார். இவற்றை அவர் பின்பற்றத் தொடங்கியதில் இருந்து அவருடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Sharmika Tips

உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்கிற விருப்பம் எல்லோருக்கும் இருக்கும். அவ்வாறு செய்ய வேண்டுமென்றால் சில விஷயங்களில் நாம் அவசியம் மெனக்கெட வேண்டும். அதிலும், நீண்ட நாட்களுக்கு அவற்றை பின்பற்றும் போது தான் அவை பலன் அளிக்கும்.

Advertisment

இது போன்ற விஷயங்களில் மருத்துவர்கள் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். தினசரி பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதால், தங்கள் நலனை பாதுகாப்பதிலும் அவர்கள் கூடுதல் அக்கறையுடன் இருப்பார்கள்.

அதனடிப்படையில் மருத்துவர் ஷர்மிகா, ஆறு பழக்க வழக்கங்களை தான் தொடர்ச்சியாக பின்பற்றுவதாக கூறுகிறார். இவற்றை பின்பற்றியதில் இருந்து தன் வாழ்வில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபயிற்சி மற்றும் ஸ்கிப்பிங்கை தான் தொடர்ச்சியாக செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், மாதவிடாய் நேரத்தில் மட்டும் ஸ்கிப்பிங் செய்வதை தவிர்த்து விடுவதாக அவர் கூறுகிறார். இது தவிர, ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவதையும், குளிப்பதையும் கடைபிடிப்பதாக அவர் கூறியுள்ளார். குளித்த பின்னர் இரவு உறங்கச் செல்வது ஃப்ரெஷ்ஷான உணர்வை கொடுப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு பழக்கங்களையும் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவர் ஷர்மிகா பின்பற்றுகிறார்.

Advertisment
Advertisements

இதேபோல், காலை எழுந்ததும் டீ அல்லது காபி போன்றவற்றை அருந்துவதற்கு பதிலாக 250 மில்லி லிட்டர் அளவில் தண்ணீரை, தான் குடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தவிர, ஆயில் புள்ளிங்கும் பல ஆண்டுகளாக அவர் கடைபிடிக்கிறார். இறுதியாக, தினசரி 10 நிமிடங்கள் வயிற்றுப் பகுதிக்கான பிரத்தியேக உடற்பயிற்சி செய்வதாக அவர் கூறியுள்ளார். 

இது போன்ற பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் நம் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதை போல், மனநலனும் சீராக இருக்கும். ஏனெனில், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய விஷயங்களை தொடர்ச்சியாக செய்யும் போது அவை மனதையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவி செய்கிறது.

நன்றி - DAISY HOSPITAL Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Habits that can make difference in your lifestyle Effective lifestyle changes to boost immunity

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: