தூக்கமின்மையால் அவதிப்படுபவரா நீங்கள்? அப்போ டாக்டர் ஷர்மிகா சொல்லும் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

இரவு நேரத்தில் நன்றாக தூக்கம் வருவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை மருத்துவர் ஷர்மிகா குறிப்பிட்டுள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் நாம் பார்க்கலாம்.

இரவு நேரத்தில் நன்றாக தூக்கம் வருவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை மருத்துவர் ஷர்மிகா குறிப்பிட்டுள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் நாம் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Sleeping tips

இரவு நேரத்தில் சரியாக உறங்காமல் இருந்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று வல்லுநர்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்துகின்றனர். எனினும், எவ்வளவு முயற்சி செய்தாலும் தூக்கம் வருவதில்லை என்று பலரும் கூறுகின்றனர்.

Advertisment

அந்த வகையில் சில வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் சீரான உறக்கத்தை பெறலாம். ஆனால், இதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும். அந்த வகையில் சில டிப்ஸ்களை மருத்துவர் ஷர்மிகா குறிப்பிட்டுள்ளார்.

முதலாவதாக இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக வெறும் தண்ணீரில் குளிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார். இதன் மூலம் சருமத்தையும் ஆரோக்கியமாக பராமரிக்க முடியும். அடுத்தபடியாக, ஆண் மற்றும் பெண் என எந்த பாலினத்தவராக இருந்தாலும் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.

குறிப்பாக, சில ஆண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தும் கூட தூங்குவதாக மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். இவ்வாறு செய்யக் கூடாது என்று அவர் அறிவுறுத்துகிறார். இது மட்டுமின்றி இரவு தூங்கும் போது அந்த அறை முழுவதும் இருட்டாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பிரகாசமான விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம்.

Advertisment
Advertisements

இதேபோல், உறங்குவதற்கு முன்பாக செல்போன் பயன்படுத்துவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். செல்போன் பயன்பாடுகளால் தான் தற்போது நிறைய பேருக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது. மேலும், தூங்குவதற்கு சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும்.

இவை அனைத்தையும் பின்பற்றிய பின்னரும் தூக்கம் வரவில்லை என்றால், சுடுதண்ணீரில் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு, அதில் கால் பாதங்களை 20 நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். இவ்வாறு செய்தால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி - DAISY HOSPITALYoutube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Best sleep inducing foods

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: