இரவு சீக்கிரம் தூங்க முடியவில்லையா? இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க: டாக்டர் ஷர்மிகா அட்வைஸ்

இரவு நேரத்தில் சீக்கிரம் தூக்கம் வருவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து மருத்துவர் ஷர்மிகா விளக்கம் அளித்துள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் நாம் பார்க்கலாம்.

இரவு நேரத்தில் சீக்கிரம் தூக்கம் வருவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து மருத்துவர் ஷர்மிகா விளக்கம் அளித்துள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் நாம் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Sleeping tips

நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் எனவும், சீராக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் பலர் கூறுவார்கள். உணவு, உடற்பயிற்சி எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு தூக்கமும் முக்கியம்.

Advertisment

நாள்தோறும் வேலை பார்த்த பின்னர், நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வாகவும், நிதானமாகவும் இருப்பது நாம் தூங்கும் போது தான். குறிப்பாக, இரவு நேர தூக்கம் என்பது இன்றியமையாதது. இரவில் சரியாக தூங்கினால் மட்டுமே, அடுத்த நாள் நம்மால் சரியாக வேலை செய்ய முடியும்.

ஆனால், தற்போதைய சூழலில் பலருக்கு இரவு நேரத்தில் சரியாக தூக்கம் வருவதில்லை. அதிகப்படியான செல்போன் பயன்பாடு, மன அழுத்தம் என்று பல விஷயங்கள் நம்முடைய தூக்கத்தை பாதிக்கின்றன.

சரியாக தூங்காமல் இருக்கும் போது உடல் வலி, பசியின்மை, மலச்சிக்கல் மற்றும் செரிமானம் தொடர்பான பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். அந்த வகையில் இரவில் சீக்கிரமாக உறங்குவதற்கான வழிமுறையையும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

அந்த வகையில் இரவு எவ்வளவு தாமதமாக தூங்கினாலும், காலை 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். இவ்வாறு தொடர்ந்து சீக்கிரமாக எழுந்து கொள்ளும் போது, நம்முடைய உடல் இரவில் சீக்கிரமாக உறங்குவதற்கு தயாராகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இரவில் சீக்கிரம் தூங்க முடியாதவர்கள் இந்த டிப்ஸை ஃபாலோ செய்யலாம் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.

நன்றி - DAISY HOSPITAL Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Best tips to maintain healthy sleep

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: