சாப்பிட்ட பின் 10 நிமிட குறுநடை… உடல் எடை சர்ருனு குறையும்; டாக்டர் ஷர்மிகா
உடல் எடையை குறைப்பதற்கு சில முக்கியமான டிப்ஸ்களை மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இவற்றை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை கணிசமான அளவு குறைக்க முடியும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
உடல் எடையை குறைப்பதற்கு சில முக்கியமான டிப்ஸ்களை மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இவற்றை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை கணிசமான அளவு குறைக்க முடியும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இணையத்தில் அதிகப்படியாக தேடப்படும் தகவல்களில் உடல் எடை குறைப்பு என்பது முதன்மையான இடத்தில் இருக்கும். அந்த அளவிற்கு நிறைய பேர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஏனெனில், இது ஆரோக்கிய குறைபாடாக தற்போதைய சூழலில் மாறி இருக்கிறது.
Advertisment
உடல் எடை அதிகரிப்பதற்கு எத்தனையோ காரணங்கள் கூறப்படுகின்றன. மரபியல் ரீதியான காரணங்கள், உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், தூக்கமின்மை, மருந்துகளின் பக்கவிளைவுகள் என்று நிறைய காரணங்களை கூறுகின்றனர்.
இவ்வளவு காரணங்கள் இருந்தபோதிலும், உடல் எடை குறைப்பு என்ற ஒரே குறிக்கோள் மட்டும் எல்லோரிடத்திலும் பொதுவாக இருக்கும். இதற்கு உதவி செய்யும் வகையில் மருத்துவர் ஷர்மிகா சில டிப்ஸ்களை கொடுத்துள்ளார். குறிப்பாக, இவற்றை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை கணிசமான அளவு குறைக்க முடியும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
முதலாவதாக, உடலில் நீர்ச்சத்து சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், சரியான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் மற்ற பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற பசி ஏற்படாமல் இருக்கும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
அடுத்தபடியாக, 20 நிமிடங்களாவது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு செய்யும் போது உடலில் இருந்து வியர்வை வெளியாக வேண்டும். அந்த அளவிற்கு தீவிர உடற்பயிற்சி செய்வதை நம் தினசரி பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா கூறியுள்ளார்.
இது தவிர உணவுகளை எடுத்துக் கொள்ளும் நேரத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும். உதாரணத்திற்கு மாலை 6 அல்லது 6:30 மணிக்குள்ளாக இரவு உணவை எடுத்துக் கொள்வது, உடல் எடை குறைப்பிற்கு உதவும் என்று கூறப்படுகிறது.
இறுதியாக, சாப்பிட்டு முடித்ததும் சுமார் 10 நிமிடங்களுக்கு குறுநடை போட வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். செரிமானம் சீராக இருந்தால், தேவையில்லாத கொழுப்புகள் தங்குவதற்கு வாய்ப்பு இருக்காது. எனவே, இந்த அனைத்து டிப்ஸ்களையும் பின்பற்றி உடல் எடையை குறைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.