எடை குறைப்புக்கு உடற்பயிற்சி மட்டும் போதாது; இது தான் ரொம்ப முக்கியம்: டாக்டர் ஷர்மிகா அட்வைஸ்
உடல் எடையை குறைப்பதற்கு கடுமையான உடற்பயிற்சி மட்டும் போதுமானதாக இருக்காது என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். குறிப்பாக, உணவு முறை மாற்றம் இதற்கு மிகவும் அவசியம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
உடல் எடையை குறைப்பதற்கு கடுமையான உடற்பயிற்சி மட்டும் போதுமானதாக இருக்காது என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். குறிப்பாக, உணவு முறை மாற்றம் இதற்கு மிகவும் அவசியம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தங்களுடைய அன்றாட பணிகளை செய்வதில் ஏற்படும் சிரமத்தில் தொடங்கி மாரடைப்பு ஏற்படும் அபாயம் வரை நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Advertisment
இது போன்ற காரணங்களுக்காக தான் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், எவ்வளவு தான் உடற்பயிற்சிகள் மேற்கொண்டாலும், உடல் எடையை குறைக்க முடிவதில்லை என்று பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம்.
அந்த வகையில், உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் செய்யும் தவறு என்னவென்று மருத்துவர் ஷர்மிகா குறிப்பிட்டுள்ளார். மேலும், உடல் எடை குறைப்புக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
உதாரணத்திற்கு, 100 கிலோ எடையுடன் இருக்கும் நபர் 60 கிலோ வருவதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்றால், அவரால் பெரிய அளவிலான மாற்றங்களை பார்க்க முடியாது என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார்.
Advertisment
Advertisements
ஏனெனில், எடை மிக அதிகமாக இருப்பவர்கள் உணவு முறை மாற்றத்தைச் சீரமைத்து அத்துடன் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது மட்டும் தான் அவர்களால் உடல் எடையை குறைக்க முடியும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
மாறாக, 60 கிலோ எடை கொண்ட நபர், அதே எடையில் இருக்க நினைத்தால், அவர் கடும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். எனவே, சரியான உணவு முறை மூலம் உடல் எடையை குறைத்து, அதே எடையில் தொடர்வதற்கு கடும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். அந்த வகையில், உடல் எடை குறைப்பில் 80 சதவீதத்திற்கு உணவு முறை பங்கு வகிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.