இதய பாதிப்பு இருந்தால் கீரை சாப்பிடக் கூடாதா? டாக்டர் ஷியாமளா விளக்கம்
இருதய பாதிப்பு இருப்பவர்கள் கீரையை தங்கள் உணவில் எடுத்துக் கொள்ளலாமா என்பது குறித்து மருத்துவர் ஷியாமளா விளக்கம் அளித்துள்ளார். இதற்கு அறிவியல்பூர்வமாக அவர் பதிலளித்துள்ளார்.
இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீரை சாப்பிடக் கூடாது என்ற ஒரு கருத்து பெரும்பாலான மக்களிடையே நிலவி வருகிறது. இந்த சூழலில் இருதய நோயாளிகள் கீரையை எடுத்துக் கொள்ளலாமா என்று மருத்துவர் ஷியாமளா விளக்கம் அளித்துள்ளார். அதற்கான பதிலைக் காண்போம்.
Advertisment
கீரை சாப்பிடக் கூடாது என அனைத்து விதமான இருதய நோயாளிகளுக்கும் பரிந்துரைக்கப்படுவதில்லை என மருத்துவர் ஷியமளா குறிப்பிட்டுள்ளார். மெக்கானிக்கல் வால்வ் அறுவைசிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள், வார்ஃப்ரைன் போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள்.
இந்த மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மட்டுமே கீரைகளை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர் ஷியாமளா அறிவுறுத்துகிறார். ஏனெனில், டிரக் நியூட்ரியன்ட் இன்ட்ராக்ஷன் நடைபெறும் போது, மருந்தின் உறிந்து கொள்ளும் தன்மை குறையத் தொடங்கும். இதன் காரணமாகத்தான் குறிப்பிட்ட மருந்தை உட்கொள்ளும் நோயாளிகள் கீரையை தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மற்றவர்கள் கீரையை உணவாக சாப்பிடலாம். கீரையில் அதிகப்படியான ஃபைபர் சத்துகள் இருக்கிறது. இவை இருதயத்திற்கு நன்மை அளிக்கும் என மருத்துவர் ஷியாமளா தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
அதே சூழலில், இருதய பாதிப்பால் தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், எந்த வகையான கீரைகளை, எந்த அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம் தங்கள் மருத்துவரை முறையாக அணுகி ஆலோசனை பெறலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒவ்வொருவருக்குமான உடல் ஆரோக்கியம் மற்றும் பிரச்சனைகள் வேறுபடுவதால் உணவு பழக்க வழக்கங்களில் தகுந்த மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் செயல்படுவது தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்கும்.
நன்றி - Kauvery Hospital Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.