இன்றைய தலைமுறையினர் பலரும் உடல் சதையில் தளர்வு மற்றும் தொய்வு ஏற்பட்டு காணப்படுகின்றனர். இவை ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வயதாகும் போது தசைகளின் வலிமை குறைந்து அவை தொங்கும் நிலைக்கு செல்லும் என மருத்துவர் சிவராமன் குறிப்பிடுகிறார். சதை தளர்வதை அழகியல் ரீதியாக பார்க்காவிட்டாலும், ஆரோக்கிய ரீதியாக அதனை பார்க்க வேண்டும்.
இதனை தடுக்க முதலில் உடற்பயிற்சியை அதிகரிக்க வேண்டும். நடைபயிற்சி, சூரிய நமஸ்காரம் என ஏதேனும் ஒரு பயிற்சியை தினசரி செய்ய வேண்டும். குறிப்பாக, இடுப்பு பகுதியில் சதை தொய்வு ஏற்படுவதை தடுக்க பிளான்க் வகையிலான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
மேலும், தொய்வான சதைகளை இறுக்க வேண்டுமென்றால் கொள்ளு சாப்பிடலாம் என மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார். இதேபோல், அரிசி உணவுகளை குறைத்து விட்டு புரதம் நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.