இளமையை நீட்டிக்கும் மெலட்டோனின்... சரியாக சுரக்க இந்த நேரத்தில் தூங்குவது அவசியம்; டாக்டர் வேணி
நம்முடைய உடலில் இயற்கையாக சுரக்கக் கூடிய மெலட்டோனின் என்ற ஹார்மோன் குறித்து மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார். குறிப்பாக இதன் நன்மைகள் என்னவென்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நம்முடைய உடலில் இயற்கையாக சுரக்கக் கூடிய மெலட்டோனின் என்ற ஹார்மோன் குறித்து மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார். குறிப்பாக இதன் நன்மைகள் என்னவென்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மெலட்டோனின் என்பது ஒரு ஹார்மோன். இந்த மெலட்டோனின் இரவு தூங்கும் நேரத்தில் மட்டுமே நம்முடைய உடலில் சுரக்கும் என்று மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான கூடுதல் தகவல்களை நியூரோ டாக்டர் தமிழ் என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
இது உடலில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் செல் சேதம் மற்றும் வயதான அறிகுறிகள் குறைகின்றன. மெலட்டோனின் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இது புற ஊதா கதிர்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சருமத்தை காக்கிறது. மேலும், சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சுருக்கங்களை குறைக்கிறது.
மெலட்டோனின் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இது மூளை செல்கள் சிதைவடைவதை தடுக்கிறது. இது உடலில் ஏற்படும் அழற்சியை குறைத்து, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது என மருத்துவர் வேணி கூறுகிறார். இதன் உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக, காலை சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவிட வேண்டும். இது உடலில் மெலட்டோனின் உற்பத்தியை ஊக்குவிக்கும். படுக்கைக்கு செல்லும் முன் மொபைல் போன், டிவி போன்ற திரை வெளிச்சத்தை தவிருங்கள். ஏனெனில், வெளிச்சம் மெலட்டோனின் உற்பத்தியை குறைக்கும். அதன்படி, படுக்கையறை இருட்டாக இருக்க வேண்டும். குறிப்பாக, தினமும் இரவு 10:30 மணிக்கு தூங்கி விட வேண்டும் எனவும், சுமார் 7 முதல் 8 மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும் என்றும் மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.