கால் அடிக்கடி வீக்கம் ஆகுதா? உஷார்… இந்த பிரச்சனைகள் இருக்கலாம்; எச்சரிக்கும் டாக்டர் விஜி
அடிக்கடி கால் வீக்கம் வருவதற்கான காரணத்தை மருத்துவர் விஜி தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு குணப்படுத்தலாம் என்றும் அவர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
அடிக்கடி கால் வீக்கம் வருவதற்கான காரணத்தை மருத்துவர் விஜி தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு குணப்படுத்தலாம் என்றும் அவர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
சில வகையான உடல் உபாதைகள் எதற்காக ஏற்படுகிறது என்று தெரியாமல் இருக்கும். அப்படி ஒரு பிரச்சனை தான் கால் வீக்கம். நிறைய பேருக்கு கால்கள் அடிக்கடி வீக்கமாக இருக்கும். அதன்படி, கால் வீக்கம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து மருத்துவர் விஜி தெரிவித்துள்ளார்.
Advertisment
வயதானவர்களுக்கு பெரும்பாலும் கால் வீக்கம் ஏற்படும். இதேபோல், நீண்ட தூரம் தொடர்ச்சியாக பயணம் செல்பவர்களுக்கும் கால் வீக்கம் உருவாகும். இது தவிர சர்க்கரை நோயாளிகளுக்கும் கால் வீக்கம் வரக் கூடும் என்று மருத்துவர் விஜி தெரிவித்துள்ளார். குறிப்பாக, இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால் கால்கள் வீக்கமடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சிறுநீரக கோளாறு குறித்து எச்சரிக்கை விடுக்கும் ஒரு அறிகுறியாக கால் வீக்கம் இருக்கலாம். இது தவிர சிறுநீரில் புரதம் வெளியேறும் போதும், இருதய பிரச்சனை ஏற்பட்டாலும் கால்கள் வீக்கம் அடையலாம் என்று மருத்துவர் விஜி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கால்கள் வீங்கும். அதன்படி, இது போன்ற பாதிப்புகள் இருந்தால் கால் வீக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் விஜி தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
கால் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டால், படுக்கும் போது தலையணையை பயன்படுத்தி கால்களை உயர்த்தி வைத்திருக்க வேண்டும். ஓய்வு நேரத்தின் போது கால்களுக்கான சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் விஜி அறிவுறுத்துகிறார். எனினும், கால் வீக்கம் குறையவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி - BOGA HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.