கிட்னி கல் கரைய, விதை வீக்கம் மறைய, தாம்பத்யம் சிறக்க... சுடுதண்ணீரில் இந்த பொடி 1 ஸ்பூன்!
ஒரே சித்த வைத்தியம் மூலமாக ஆண்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் என மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். அதற்கான விளக்கத்தை தற்போது காணலாம்.
பெண்களின் உடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தற்போதைய காலத்தில் ஓரளவிற்காவது விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால், ஆண்களின் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பொதுவெளியில் பேசத் தயங்குகின்றனர். அந்த வகையில் ஆண்களின் பிரச்சனைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்ரான் அளவு அதிகமாக இருத்தல் அவசியம். அந்த வகையில் டெஸ்டோஸ்ட்ரான் அளவை அதிகரிக்க நீர்முள்ளி பயன்படுவதாக மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதேபோல் சில நேரத்தில் விதை வீக்கத்தால் பலர் அவதிப்படுவார்கள். அவர்களுக்கும் நீர்முள்ளி நல்ல மருந்தாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகமாக வெயிலில் சுற்றுவது, சரியாக தண்ணீர் குடிக்காதது போன்ற காரணத்தால் சிறுநீரகத்தில் கல் உருவாகும். இதனால் அடிக்கடி வலி ஏற்படும். இது போன்ற பிரச்சனையையும் நீர்முள்ளி கசாயத்தின் மூலம் குணப்படுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் சத்துகள் நீர் முள்ளியில் இருக்கிறது. எனவே, நீர் முள்ளியை தினசரி எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார். அதன்படி, ஒரு ஸ்பூன் அளவு நீர்முள்ளியை தண்ணீரில் கலந்து, அதனை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்தால் ஆண்களின் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisement
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.