கடவுச்சீட்டை பெற கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த தொந்தரவுகள் இப்போது இல்லை. ஒருவர் இணையம் வாயிலாக சாதாரணமாக விண்ணப்பம் செய்து, அப்பாயின்மென்ட் முன்பதிவு செய்துவிட்டு, தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். அது அவ்வுளவு எளிது. ஆனால் உங்களிடம் அனைத்து சரியான ஆவணங்களும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சாமர்த்தியமானது. உங்களிடம் அனைத்து தேவையான ஆவணங்களும் தயாராக இல்லையென்றால் விண்ணப்பிக்கும் நடைமுறை சற்று காலம் தாழ்த்தும் பணியாக மாறிவிடும். எனவே புதிய கடவுச்சீட்டு விண்ணப்பிக்க அல்லது பழைய கடவுச்சீட்டை புதுப்பிக்க சந்திப்பதற்கான (appointment) முன்பதிவு செய்வதற்க்கு முன் தேவையான அனைத்து ஆவணங்கள் குறித்து ஒரு சரிபார்ப்பு பட்டியல் தயாரித்து வைத்துக் கொள்வது சாலச்சிறந்தது.
”டைமென்சியா” ஆபத்துகளை குறைக்கும் நம்பிக்கையான துணை!
நீங்கள் சாதரண முறையில் (தட்கல் முறை இல்லாமல்) கடவுச்சீட்டு விண்ணப்பம் செய்யப் போகிறீர்கள் என்றால், அதுவும் நீங்கள் 18 வயது அல்லது அதற்கு மேலான இந்திய குடிமகன் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தேவை.
கடவுச்சீட்டு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
முகவரிச் சான்று : கடவுச்சீட்டு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவதொரு ஆவணத்தை முகவரிக்கான சான்றாக சமர்பிக்கலாம்.
ஆதார் அட்டை
மின்சார கட்டண ரசீது
சமையல் எரிவாயு இணைப்பு தொடர்பான சான்று
தொலைபேசி (தரைவழி/ போஸ்ட்பெய்டு) கட்டண ரசீது
குடிநீர் கட்டண ரசீது
வாடகை ஒப்பந்தம்
விண்ணப்பதாரரின் புகைபடம் ஒட்டப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு (செயலில் உள்ள) புத்தகம். சேமிப்பு கணக்கு தனியார் துறை இந்தியன் வங்கியிலோ, அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளிலோ அல்லது பிராந்திய கிராமப்புற வங்கிகளிலோ இருக்க வேண்டும்.
மனைவியின் கடவுச்சீட்டு நகல் (அந்த கடவுச்சீட்டின் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் நகல்கள் குடும்ப விபரங்களோடு இருக்க வேண்டும்)
பிறந்த தேதிக்கான ஆவணம்
பிறப்பு, இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் அல்லது நகராட்சி அல்லது அதுபோன்ற பரிந்துரைக்கப்பட்ட ஆணையத்தால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழாக இருக்க வேண்டும்.
மொரட்டு சிங்கிள்ஸ்க்கு 'கருப்பு’ தோசை... காதலர் தினத்தில் எங்கே கிடைக்கும் இந்த ஸ்பெஷல் தோசை?
ஏதாவதொரு கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட டிசி (TC) சான்றிதழ்
வருமான வரித்துறையால் வழங்கப்பட்ட பான் அட்டை
ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை அல்லது விண்ணப்பதாரரின் பெயரில் உள்ளா எல்ஐசி பாலிசி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.