மொரட்டு சிங்கிள்ஸ்க்கு ‘கருப்பு’ தோசை… காதலர் தினத்தில் எங்கே கிடைக்கும் இந்த ஸ்பெஷல் தோசை?

உடலுக்கு எந்த வகையிலும் தீங்கில்லை என்பதை அறிந்த பிறகே இந்த தோசையை நாங்கள் அறிமுகம் செய்தோம்.

Valentines day 2020 Charcoal Dosa for Signles at A2B
Valentines day 2020 A2B prepares special Charcoal Dosa for Signles

 Janardhan Koushik

Valentines day 2020 A2B prepares special Charcoal Dosa : ”ஓக்கே! லெட்ஸ் நாட் டிஸ்கிரிமினேட்”… மன்னிச்சுருங்க சிங்கிள்ஸ். எங்களுக்கு தெரியும் நீங்க உங்களோட வாழ்க்கைல உயரமான இலக்கை அடைய நினைக்கிறீங்க. அதுக்காக நீங்க பயங்கரமா உழைக்கிறீங்க. உங்க பெற்றோரை சந்தோசமா வச்சுக்கனும் நினைக்கிறீங்க. உங்களுக்கு இப்போதைக்கு எந்தவிதமான கமிட்மெண்ட்ஸும் வேணாம் நினைக்கிறீங்க. அதனால இந்த நாளில் உங்களை வெறுப்பேற்றுவதும் ஒரு வகையில் கவலை கொள்ளத்தக்க விசயம் தான். ஆனா என்ன ஆனாலும் கமிட் ஆகவே மாட்டேன்னு, மொரட்டு சிங்கிளா நீங்க சுத்திட்டு இருந்தா, பாஸ் உங்களுக்கு தான் இந்த செய்தியே.

‘கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!

Valentines day 2020 A2B prepares special Charcoal Dosa

 

மேலும் படிக்க : நாம் ஏன் காதலர் தினம் கொண்டாடுகின்றோம்? சுவரசியமான வரலாற்று பின்னணி!

தரமான தென்னிந்திய உணவுகளுக்கு பெயர் பெற்ற அடையார் ஆனந்த பவன் இந்த வருடம் சிங்கிள்ஸ்க்காகவே சிறப்பான, தனித்துவம் வாய்ந்த கருப்பு தோசை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து ஏ2பி ஹோட்டல்களிலும் இந்த கருப்பு தோசை சிங்கிள்களுக்காகவே விற்கப்படுகிறதாம்.

Valentines day 2020 A2B prepares special Charcoal Dosa
Valentines day 2020 A2B prepares special Charcoal Dosa

கருப்பு நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஹோட்டல்களில், கருப்பு நிற உடை அணிந்து வரும் வெய்ட்டர்கள் உங்களுக்கான கருப்பு நிற தோசையை பரிமாறுவார்கள். ஆக எல்லாமே கருப்பு தான். குரோம்பேட்டையில் அமைந்திருக்கும் ஏ2பி ஹோட்டலின் மேற்பார்வையாளார் ப்ரேம் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறூம் போது, வேலன்டைன்ஸ் டே சிறப்பு நிகழ்வாக சிங்கிள்ஸினை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த தோசை வகை. ஆனாலும் மற்றவர்கள் வாங்கி உண்பதற்கும் தடை ஏதும் இல்லை என்று கூறினார்.

மேலும் படிக்க : எங்க தான் கிடைக்கும் இந்த இளநீர் சர்பத்? கோவை மக்களை தேட வைக்கும் சூப்பர் கடை!

இந்த தோசை சென்னையில் அமைந்திருக்கும் அனைத்து ஏ2பி உணவகங்களிலும் பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 16ம் தேதி வரை கிடைக்கும் என்பது கூடுதல் தகவல். இந்த கருப்பு தோசையை நாங்கள் “தேங்காய் ஓட்டினை எரித்து கிடைக்கும் கரியை அரைத்து தோசை மாவில் சேர்த்து தயாரித்திருக்கின்றோம். உடலுக்கு எந்த வகையிலும் தீங்கில்லை என்பதை அறிந்த பிறகே இந்த தோசையை நாங்கள் அறிமுகம் செய்தோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Valentines day 2020 a2b prepares special charcoal dosa for singles

Next Story
நாம் ஏன் காதலர் தினம் கொண்டாடுகின்றோம்? சுவரசியமான வரலாற்று பின்னணி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express