நாம் ஏன் காதலர் தினம் கொண்டாடுகின்றோம்? சுவரசியமான வரலாற்று பின்னணி!

வேலன்டைன்ஸ் டே வாழ்த்துகள் 16ம் நூற்றில் இருந்து மக்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது

By: Updated: February 14, 2020, 01:58:37 PM

Happy Valentine’s Day 2020 : ஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலக எங்கிலும் காதலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு சிலர் இந்த சிறு சிறு கொண்டாட்டங்களை நினைவில் கொள்ள அன்பளிப்புகள், மலர்கொத்து போன்றவற்றை பரிசளித்து மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றார்கள். வேறு சிலரோ இது தேவையற்ற நிகழ்வுகள் என்றும், இந்த நாளுக்கு இவ்வளவு “சீன் இல்லை” என்றும் கூறுகின்றார்கள். பரிசுப்பொருட்கள், கேண்டில் லைட் டின்னர், வாழ்த்துகள் என அனைத்தும் இருக்கட்டும் நாம் இந்த தினத்தின் பின்னால் இருக்கும் வரலாறு என்ன என்று இப்போது பார்ப்போம்.

‘கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!

வேலன்டைன்ஸ் டே என்ற தினம் புனித வேலன்டைன்ஸ் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. பழைய ரோம் நகரத்து வசந்த கால பண்டிகை தான் லூபர்கலியா. இது போன்று வசந்த காலத்தில் தான் அந்த திருவிழாவும் கொண்டாடப்படும்.  ஆண்களும் பெண்களும் இணைந்து கொண்டாடப்பட்ட இந்த விழாவின் பெயர் 14ம் நூற்றாண்டில் தான் வேலன்டைன்ஸ் டே என்று மாற்றப்பட்டது.

மேலும் படிக்க : வீட்டிலேயே காதலர் தினம் கொண்டாடும் பிளான் இருக்கிறதா? கட்டாயம் இந்த படங்களைப் பாருங்கள்

வேலன்டைன் என்பவர் ஒரு கிறித்துவ பாதிரியார். அவர் ரோம் நகரில் வாழ்ந்த ஆண்களின் வாழ்வு போரில் முடிவடையக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அரசர் க்ளாடியஸ் 2 கோதிகஸ் கட்டளைகளை மீறி, இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. மற்றொரு வரலாறோ, சிறை காவலாளியின் பார்வையற்ற மகளுக்கு மீண்டும் கண்பார்வையை பெற்றுத் தந்தார் என்றும், அவரின் மரண தண்டனைக்கு முன்பாக, அந்த பெண்ணுக்கு “உன்னுடைய வேலன்டைனிடம் இருந்து” என கடிதம் ஒன்றை எழுதியதாகவும் கூறுகிறது.  வேலன்டைன்ஸ் டே வாழ்த்துகள் 16ம் நூற்றில் இருந்து மக்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது என்றும், 18ம் நூற்றாண்டில் இருந்து வாழ்த்து அட்டைகள் பகிர்ந்து கொள்ளுதலும் பழக்கத்திற்கு வந்தது என்றும் வரலாற்று தகவல்கள் நமக்கு கிடைக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Happy valentines day why do we celebrate on february 14

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X