10 நிமிஷத்தில் சுவையான சுரைக்காய் தோசை; காலை உணவுக்கு இதை விட டேஸ்ட்டியா வேறென்ன வேணும்?
Sorakkai Dosa in tamil:- ஏகப்பட்ட மருத்துவ பயன்களை கொண்டுள்ள சுரைக்காயில் சுவைமிகுந்த காலை உணவான "சுரைக்காய் தோசை" எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Sorakkai Dosa in tamil:- ஏகப்பட்ட மருத்துவ பயன்களை கொண்டுள்ள சுரைக்காயில் சுவைமிகுந்த காலை உணவான "சுரைக்காய் தோசை" எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
dosa recipes in tamil: நீர்ச் சத்து அதிகம் காணப்படும் காய்கறி வகைகளில் சுரைக்காயும் ஒன்று. இவற்றின் சாறோடு சிறிதளவு எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வந்தால் சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சுரைக்காய் சிறந்தது. அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் தங்கள் அன்றாட உணவில் சுரைக்காயை சேர்த்துக்கொள்ளலாம்.
Advertisment
இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ள சுரைக்காயில் சுவைமிகுந்த காலை உணவான சுரைக்காய் தோசை எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
சுரைக்காய் தோசை செய்யத் தேவையான பொருட்கள்:-
சுரைக்காய் - 1 பச்சரிசி - 2 1/2 கப் வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 4 இஞ்சி - 1 1/2 துண்டு உப்பு - தேவையான அளவு கருவேப்பிலை - 2 கொத்து கொத்தமல்லி தழை - 2 கொத்து
Advertisment
Advertisements
சுரைக்காய் தோசை செய்முறை:-
முதலில் பச்சரிசியை எடுத்து அவற்றை நன்கு அலசிக்கொள்ளவும். பிறகு அவற்றை சுமார் 1 மணி நேரத்திற்கு தண்ணீர் விட்டு ஊற வைத்துக்கொள்ளவும்.
அதன் பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தொடர்ந்து சுரைக்காயையும் அதன் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
இப்போது சுரைக்காய் மற்றும் நன்கு ஊற வைத்த பச்சரிசியை ஒரு மிக்சியில் போட்டு தோசைக்கு அரைத்துக்கொள்ளவது போல் அரைக்கவும்.
தொடர்ந்து முன்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துள்ள மாவோடு சேர்த்துக் கொள்ளவும். பிறகு அவற்றை தோசைகளாக சுட்டு உங்களுக்கு விருப்பமான சைடிஷ்களுடன் சேர்த்து ருசிக்கவும்.