மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… கவலை தேவையா? டாக்டர் அருண்குமார் விளக்கம்

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று பேசப்படுவதால் மக்கள் மத்தியில் எழும் கவலைகள் குறித்து டாக்டர் அருண்குமார் விளக்கமாகக் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று பேசப்படுவதால் மக்கள் மத்தியில் எழும் கவலைகள் குறித்து டாக்டர் அருண்குமார் விளக்கமாகக் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
dr

பொது இடங்களில், முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று பலரும் கூறிவரும் நிலையில், இதனால், மீண்டும் லாக் டவுன் வருமா என்ற கவலையும் பீதியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டாக்டர் அருண்குமார் தனது யூடியூப் சேனலில் (Doctor Arunkumar) விளக்கமாகப் பேசியுள்ளார்.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று பேசப்படுவதால் மக்கள் மத்தியில் எழும் கவலைகள் குறித்து டாக்டர் அருண்குமார் விளக்கமாகக் கூறியுள்ளார்.

Advertisment

சமீபத்தில் இந்திய அளவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பொது இடங்களில், முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று பலரும் கூறிவரும் நிலையில், இதனால், மீண்டும் லாக் டவுன் வருமா என்ற கவலையும் பீதியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டாக்டர் அருண்குமார் தனது யூடியூப் சேனலில் (Doctor Arunkumar) விளக்கமாகப் பேசியுள்ளார்.

டாக்டர் அருண்குமார் கூறியதை சுருக்கமாக இங்கே தருகிறோம். கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாம் அலைக்கு பிறகு, உருமாற்றம் அடைந்து வருகிறது. ஆர்.என்.ஏ வகை வைரசான கொரோனா வைரஸ், அவ்வப்போது அதன் புரதத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து ஒமிக்ரான், டெல்டா, என்று ஆராய்ச்சியாளர்கள் பெயர் வைத்து வருகிறார்கள்.  

Advertisment
Advertisements

ஃபுளு வைரஸ் போல, கொரோனா வைரஸும் உருமாற்றங்களை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் பெரிய அளவில் உருமாற்றம் அடையும்போது இது போல, ஒரு அதிக அளவில் தொற்று ஏற்பட்டு சரியாகிவிடும். இதனால், பெரிய அளவில் பாதிப்பு, உயிரிழப்புகள் ஏற்படவில்லை. 

2023 மார்ச் - ஏப்ரல் மாதங்களில் பரவிய xbb.1.1 கொரோனா வைரஸால் 18000 தொற்றுகள் பதிவானது. 
60 பேர் உயிரிழந்தனர். 

அதே போல, டிசம்பர், 2023-ல் பரவிய Omicron - J1.1 கொரோனா வைரஸால், 4,000 தொற்றுகள் வரை பதிவானது, 25 பேர் உயிரிழந்தனர். 

தற்போது மே, 2025-ல் பரவும் கொரோனா வைரஸ் உருமாற்றங்களான ஒமிக்ரான் வகை NB.1.8.1, JN.1 Covid, LF.7 Covid ஆகியவற்றால் 3400 டதொற்றுகள் தமிழ்நாட்டில் 2, கேரளாவி 6 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வழக்கமான, வைரஸ் காய்ச்சல் போல வந்திருக்கிறது. 

உலக சுகாதார நிறுவனம், இது போல கொரோனா தொற்று பரவும்போது, பாதிப்பு இல்லாமல் பரவும் தொற்றை variants under monitoring என்றும், பெரிய அளவில் பாதிப்பு, உயிரிழப்புடன் பரவும்போது variants of concern என்று நிலைமையை இரண்டு வகையாகப் பிரிக்கிறது. தற்போது உலக சுகாதார நிறுவனம் variants of concern என்று வகைப்படுத்தவில்லை. அதனால், மக்கள் பயப்படத் தேவையில்லை.

தற்போது பரவும் கொரோனா வைரஸ் தொற்றுகளால், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு ஆகிய அறிகுறிகள் மட்டுமே உள்ளன. தொற்று உறுதி செய்யப்பட்டால், வழக்கமான சளி, காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போடத் தேவையில்லை. ரெம் டெசிவிர் போன்ற மருந்துகளும் பயன்படுத்த தேவையில்லை. 

குழந்தைகளுக்கு பாதிக்குமா என்றால் வழக்கமான சளி, காய்ச்சல் போல வந்து போகிறது. அதனால், யாரும் கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில், கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.

 

Corona Guidelines health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: