உடல் பருமனைக் குறைக்க பகல் நேரத்தில் மட்டுமல்லாமல், இரவு நேரங்களிலும் ஒத்துழைக்கு உடல் தயாராக இருக்கிறது. ஆனால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நம்ம கையில்தான் இருக்கிறது என்று டாக்டர் சிவக்குமார் கூறுகிறார். இந்த முறையில் நீங்களும் தூங்கும்போது அதிக கலோரிகளை எரிக்கலாம். ட்ரை பண்ணி பாருங்கள்.
தூங்கும்போதும் உடல் கலோரிகளை எரிக்கிறது. அப்படி தூங்கும்போது எரிக்கப்படும் கலோரிகளை அதிகப்படுத்த வேண்டுமா? அதற்கு இதை செய்யுங்கள் என்று டாக்டர் சிவக்குமார் பரிந்துரைத்துள்ளார்.
மனித உடல் பகல் நேரங்களில் வேலை செய்யும்போது மட்டுமில்லாமல் இரவு நேரங்களில் தூங்கும்போதும் கலோரிகளை எரிக்கிறது. அப்படி தூங்கும்போது, அதிக கலோரிகளை எரிப்பதற்கான வழிமுறைகளை டாக்ட சிவக்குமார் கூறுகிறார்.
தூங்கும்போது, உடலுக்குள் செயல்பாடுகளுக்கும் கலோரிகள் தேவை. அதனால், இரவு நேரங்களில் அதிகம் புரோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். உடல் புரோட்டின் நிறைந்த உணவுகளை செரிமானம் செய்வதற்கு அதிக கலோரிகளை செலவழிக்கிறது. கொழுப்பச் சத்து உணவு செரிமானம் செய்ய 5% கலோரிகள் செலவாகும். மாவுச்சத்து செரிமானம் செய்ய 5% முதல் 15% கலோரிகள் செலவாகும். புரோட்டின் உணவு செரிமானம் செய்ய 20% முதல் 30% கலோரிகள் செலவாகும்.
இப்படி புரோட்டின் உணவு எடுத்துக்கொள்வதால், நள்ளிரவு ஸ்நாக்ஸ் சாப்பிட மாட்டீர்கள். புரோட்டின் உணவு எடுக்க வேண்டும் என்றால், சைவ உணவு சாப்பிடுபவர்கள் டோப், சோயாபென், சுண்டல் சாப்பிடலாம். அசைவ உணவு சாப்பிடுபவர்கள், சிக்கன், மீன், முட்டை எடுத்துக்கொள்ளலாம்.
பகல் நேரங்களில் அதிகப் படியான உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு வேலைகளை செய்தால், இரவு நேரங்களில் உறுப்புகளுக்கு தூங்கும்போது அதிகப்படியான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. அதற்காக அதிக கலோரிகளை செலவழிக்கும். அதுமட்டுமில்லாமல் அதிகமான ஹார்போன் சுரக்கிறது. இது கொழுப்பை கரைக்கும் செயலில் ஈடுபடும். அதுமட்டுமில்லாமல், உடலுக்கு ஆற்றல் தேவை என்றால், கொழுப்பு செல்களில் இருந்து எடுத்துக்கொள்ளும் விதமாக, இந்த ஹார்மோன்கள் உதவி செய்யும். அதே போல, ஒருவர் 20 டிகிரி வெப்பநிலைக்கு கீழே உள்ள ஒரு அறையில் தூங்கினால், அவர்களுடைய உடல் அதிகமான கலோரிகளை எரிக்கும் என்று டாக்டர் சிவக்குமார் கூறுகிறார்.
உடலில் வெள்ளை கொழுப்புகள், பிரவுன் கொழுப்புகள் என்ற 2 கொழுப்புகள் உள்ளன. இதில் வெள்ளை கொழுப்புகள் கலோரிகளை சேமிக்க பார்க்கும். அதே போல பிரவுன் கொழுப்புகள் எப்போதும் கலோரிகளை எரிக்கப் பார்க்கும். ஒருவர் சில்லென இருக்கும் அறையில் தூங்கும்போது, இந்த பிரவுன் கொழுப்புகள் கலோரிகளை எரிப்பதில் செயல்படும். ஒருவர் 7 - 9 மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால், அவர் உடலில் வளர்சி்தை மாற்றம் தூண்டப்படும். அதிகமான வளர்ச்சி ஹார்மோன் சுரக்கும். கார்டிசால் என்கிற ஹார்மோன் குறைவாக உற்பத்தியாகும். இந்த கார்டிசால் ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தி ஆனால், உடல் பருமன் ஏற்படும். அதே போல் தொடர்ச்சியான தூக்கம் இன்சுலின் சென்சிட்டிவிட்டியைத் தூண்டும். அணுக்கள் சுகரை எடுத்துக்கொள்ளும் தன்மையை அதிகப்படுத்தும். ஆழ்ந்த உறக்கம் உடலின் கலோரிகளை எரிக்கும் சக்தியை அதிகரிக்கும். உடல் பருமனைக் குறைக்க பகல் நேரத்தில் மட்டுமல்லாமல், இரவு நேரங்களிலும் ஒத்துழைக்கு உடல் தயாராக இருக்கிறது. ஆனால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நம்ம கையில்தான் இருக்கிறது என்று டாக்டர் சிவக்குமார் கூறுகிறார். இந்த முறையில் நீங்களும் தூங்கும்போது அதிக கலோரிகளை எரிக்கலாம். ட்ரை பண்ணி பாருங்கள்.