செல்போன்... இது இல்லாமல் இன்று உலகில் பெரும்பாலான மனிதர்கள் இல்லை... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருடைய கைகளிலும் தவழ்கிறது செல்போன். இதனால் கிடைக்கும் பயன்கள் எண்ணற்றவை. வரப்பிரசாதம் என்றும் கூட சொல்லலாம். இன்று உலகமே இதனுள் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
செல்போனால் கிடைக்கும் ஆபத்துகள் குறித்தும் நமக்கு தெரியும். நீங்களும் பரவலாக தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், சில விஷயங்கள் உங்களை அதிர்ச்சி அடைய வைக்கலாம். அவை என்னென்ன என்பது குறித்து எங்கே பார்ப்போம்,
செல்போன் அதிகம் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்து என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினம் தான். ஆனால் அதுதான் உண்மை. அமெரிக்காவில் பெண் ஒருவர் தான் வேலை செய்யும் அலுவலகத்தில் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தியதால் மூளைப் புற்றுநோய்க்குப் பலியானார். டாக்டர் ஒருவர் இந்த உண்மையை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபித்து முதல் எச்சரிக்கை மணியை அடித்தார்.
செல்போனை பயன்படுத்தும் அனைவருக்கும் உடனே இறப்பு இல்லை. ஆனால் நிச்சயமாக நோய்களால் தாக்கப்படுவர் என்பதை பல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, செல்போன் வெளியேற்றும் மின்காந்த அலைகள் ரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய்கள், வலிப்பு நோய் மற்றும் மூளைப் பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன், செல்போனை அதிகம் பயன்படுத்தும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கழிப்பறைகளில் இருக்கும் கிருமிகளை விட 3 மடங்கு அதிகமான கிருமிகள் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதன் மூலம் சரும நோய்கள் தொடங்கி பல நோய்கள் உருவாவதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
செல் ஃபோனால் ஏற்படும் அதிர்வுகள் மூளையில் தகவல்களை சேகரித்து வைக்கும் திறனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தான், அதிகமான அளவில் செல்போன் பயன்படுத்தினால், ஞாபக மறதி நோய் ஏற்படுகிறது.
செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் இரத்தணுக்களை உடைத்து, மூளைக்கு செல்லும் இரத்தத்தில் ஒருவித நச்சுத்தன்மையை உண்டாக்கிவிடும். நோமோஃபோபியா என்னும் ஒருவிதமான நோயை இது உண்டாக்கிவிடும். அதுவும், இது ஒருவித நிலையற்ற மனநிலையை உண்டாக்கி, வித்தியாசமான உலகில் இருப்பது போல் மாயையை ஏற்படுத்தும். இறுதியில், அது இல்லாமல் எதையும் செய்யமுடியாது என்பது போல் நம்மில் ஆட்கொண்டுவிடும் என எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.