சுகர் பிரச்னை இருக்கிறதா டீ, காபி குடிக்காதீர்கள் என்ற அறிவுரைகளை பலரும் கேட்டிருப்பீர்கள். ஆனால், தினமும் 4 கப்களுக்கு மேல் டீ குடித்தால் 2வது வகை சுகர் அபாயம் குறைகிறது என்று புதிய ஆய்வுகள் கூறுகிறது. ஆனால், மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பாருங்கள்.
நீரிழிவு நோய் ஒரு உலகளாவிய நோயாக மாறியுள்ளது. சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 10 அமெரிக்கர்களில் ஒருவர் நீரிழிவு நோயுடன் இருக்கிறார். அவர்களில் 90% முதல் 95% வரை டைப் 2 நீரிழிவு நோய் உள்ளது. இது உடலில் உள்ள இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் ஒரு நிலை என்பதால், நீரிழிவு நோயைத் தடுக்க முயற்சிக்கும்போது ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும், 2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய ஆரோக்கியத்துக்காக தங்கள் தினமும் தேநீர் குடிப்பதை சேர்த்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது.
மெடிக்கல் நியூஸ் டுடே இதழ் மூலம் ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் உள்ள ஐரோப்பிய சர்க்கரை நோய் ஆய்வுக்கான வருடாந்திர கூட்டத்தில் வழங்கப்பட்ட ஒரு ஆய்வில், மொத்தம் 1,076,311 பேரை உள்ளடக்கிய 19 கூட்டு ஆய்வுகளைச் செய்தது.
அதிகம் தேநீர் அருந்துதல்
வாழ்க்கை முறை மாறுபாடுகளைக் குறிப்பிடுகையில், ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் மூன்று கப் தேநீர் அருந்திய பங்கேற்பாளர்கள், தேநீர் குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, 2வது வகை நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 4% குறைவாக இருப்பதாக ஆராய்ச்சில் கண்டறிந்தனர். அதையும் தாண்டி, ஒவ்வொரு நாளும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கப் தேநீர் அருந்துபவர்களுக்கு 2வகை நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 17% குறைவாக உள்ளதையும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் கண்டறிந்துள்ளனர்.
நீரிழிவு நோயாளிகள் இடையே நடத்தப்பட்ட இந்த புதிய ஆய்வில், தினமும் 4 கப்க்கு மேல் தேநீர் அருந்துபவர்களுக்கு 2வது வகை நீரிழிவு நோய்க்கான ஆபத்ஹ்டு 17% குறைவாக இருப்பதாகக் கூறுவது சர்க்கரை நோயாளிகல் மத்தியில் உற்சாகமான மற்றும் ஊக்கமளிக்கும் செய்தியாக உள்ளது. ஒரு நாளைக்கு பல கப் தேநீர் குடிப்பது ஏன் இந்த தொடர்பைக் கொண்டுள்ளது என்பதை ஆய்வில் கண்டறிய முடியவில்லை. நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயம் குறைகிறது. மருத்துவ உணவியல் நிபுணர் செரில் முசாட்டோ, எந்த டீயைக் குடிக்க வேண்டும் எந்த டீயைக் குடிக்கக் கூடாது என்பதை கூறுகிறார்.
தேநீர் 2வது வகை நீரிழிவு நோய்க்கான ஆபத்தை குறைப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து டாக்டர் முசாட்டோ கூறுகையில், “தேநீரில் காணப்படும் பாலிபினால்கள் எனப்படும் இயற்கை சேர்மங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். அவை செல்களைப் பாதுகாக்க உதவும் முக்கியமான ஆக்ஸிஜனேற்றங்களை வழங்குகின்றன. செல்கள் சேதத்திலிருந்து மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.” என்று கூறினார்.
"கிரீன் டீயில் கேடசின்கள் உள்ளன. இது ஒரு வகையான ஆக்ஸிஜனேற்றம். இது இன்சுலினுக்கு செல் உணர்திறனை மேம்படுத்தலாம். இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கலாம்” என்று கூறுகிறார்.
நான்கு கப் தேநீருக்கு மேல் குடிப்பது ஏன் அதிக நீரிழிவு மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது என்பது குறித்து தங்களுக்குத் தெரியவில்லை என்று இந்த புதிய ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கிரீன், கருப்பு, அல்லது பதப்படுத்தப்பட்ட தேநீர் குடிப்பது 2வது வகை நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதற்கான சில நன்மைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், இது உண்மையில் ஒரு நபரின் வாழ்க்கை முறையைப் பொறுத்தது” என்று டாக்டர் முசாட்டோ கூறுகிறார். ”உதாரணமாக, அவர்கள் தங்கள் கப் தேநீரில் சர்க்கரையைச் சேர்த்தால், அது நீரிழிவு நோயின் ஆபத்தைக் குறைப்பதற்கான நோக்கத்தைத் தோற்கடிக்கிறது. அல்லது, அவர்களின் மற்ற உடல்நலப் பழக்கவழக்கங்கள் சிறந்ததாக இல்லாவிட்டால் - அவர்கள் ஆரோக்கியமற்ற உணவை உண்கிறார்கள், உடற்பயிற்சி செய்வதைத் தவிர்த்து, அதிக எடை அல்லது பருமனாக இருப்பார்கள். நீரிழிவு நோயைத் தவிர்ப்பதற்கான தேநீர் இந்த நாள்பட்ட நோயின் அபாயத்தைக் குறைப்பதற்கான தீர்வாகாது.” என்று கூறுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.