Dry Prawns Thokku in tamil: தொக்கு வகைகளில் மிகவும் சுவையான ஒன்றாக இருப்பது இறால் தொக்கு ஆகும். கடல் உணவு வகைகளில் குறைந்த நேரத்தில் தயார் செய்யக்கூடிய உணவாக உள்ள இந்த இறால் தொக்கு ரச சாதத்திற்கு சைடிஷ்ஷாக எடுத்துக்கொண்டால் அல்டிமேட் டேஸ்டாக இருக்கும். அதோடு பழைய சாதத்திற்கு இதை எடுத்துக்கொண்டால் கணக்கில்லா அளவிற்கு சாதம் சாப்பிடலாம்.
Advertisment
அப்படிப்பட்ட சுவையான மற்றும் ருசியான இறால் தொக்கு எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
இறால் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்.
காய்ந்த இறால் வெங்காயம் - 2 கடுகு சீரகம் எண்ணெய் பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 கருவேப்பிலை மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் புளி
Advertisment
Advertisements
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் காய்ந்த இறாலை போட்டு அவை நன்கு சிவக்கும் படி வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். பிறகு அவற்றை கையால் நொறுக்கி அதன் மீது உள்ள ஓட்டை நீக்கவும். அவற்றை நீக்கிய பிறகு தண்ணீர் நன்கு ஊற வைத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு மண்சட்டி அல்லது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து பொறிய விடவும். அதன் பின்னர் அதில் நன்கு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். அவை நன்கு வதங்கி வரும் போது அவற்றில் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும்.
இவையனைத்தும் நன்கு வதங்கிய பிறகு அவற்றில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். பின்னர் அவற்றோடு சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து கிளறவும். இப்போது பொடியாக நறுக்கியுள்ள தக்காளியை சேர்த்து கிளறவும். தக்காளி வேக சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். தண்ணீர் இஞ்சிய பிறகு முன்னர் வறுத்து தண்ணீரில் ஊறவைத்துள்ள இறாலை சேர்க்கவும். அவை ஒரு கொதி வந்த பிறகு அவற்றோடு புளி கரைசலை சேர்க்கவும்.
இப்போது அவற்றை ஒரு மூடியால் மூடி 5 முதல் 6 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். பிறகு திறந்து பார்த்தல் நீங்கள் எதிர்பார்த்த சுவையான இறால் தொக்கு தயாராக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“