Durga Stalin bonding with sister Charumathi is unconditional love, சிறு வயதிலேயே தாயை இழந்த சகோதரிகள்: துர்கா ஸ்டாலின்- சாருமதி பாசப் பிணைப்பு பின்னணி | Indian Express Tamil

சிறு வயதிலேயே தாயை இழந்த சகோதரிகள்: துர்கா ஸ்டாலின்- சாருமதி பாசப் பிணைப்பு பின்னணி

சாருமதி தனது அக்கா துர்கா மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர். தன்னுடைய அம்மாவாகவே துர்கா ஸ்டாலினை கருதியவர் சாருமதி

சிறு வயதிலேயே தாயை இழந்த சகோதரிகள்: துர்கா ஸ்டாலின்- சாருமதி பாசப் பிணைப்பு பின்னணி
துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரிகள் சாருமதி, ஜெயந்தி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவின் சகோதரி சாருமதி சண்முகசுந்தரம் ஆவார். இவர், கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

இந்தநிலையில், சகோதரிகளுக்கு இடையே பாசத்தை நாயகி டி.வி.,யின் செய்தியாளர் லோகநாயகி யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: அக்கா மரணம்.. கதறி அழுத துர்கா ஸ்டாலின்.. கண் கலங்கிய உதயநிதி

சாருமதி தனது அக்கா துர்கா மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர். தன்னுடைய அம்மாவாகவே துர்கா ஸ்டாலினை கருதியவர் சாருமதி. சிறிய தங்கை ஜெயந்தியும் துர்கா மீது நல்ல பாசமுடன் இருப்பவர். தங்கைகள் இருவரும் துர்கா மீது இவ்வளவு பாசம் வைக்க காரணம், சிறு வயதிலே அவர்கள் தாயை இழந்தது தான். துர்காவின் 9 ஆவது வயதில் அவரது தாயார் மரணமடைந்தார். இதனால் துர்கா தான் அவர்களை பார்த்துக் கொண்டார்.

இவர்கள் மூவரும் சகோதரிகளைத் தாண்டி நல்ல தோழிகள். என்ன பிரச்சனை வந்தாலும் துர்காவிடம் பேசி தீர்வு காண்பது சாருமதி மற்றும் ஜெயந்தியின் பழக்கம். மூவரும் தினமும் 10 முறைக்கு மேல் போனில் பேசிக் கொள்வது வழக்கம்.

2 வயது தான் மூத்தவர் என்றாலும், அக்கா துர்காவிற்கு மரியாதை கொடுப்பவர் சாருமதி. அதேபோல், ஸ்டாலினை அத்தான் என்று அழைப்பார் சாருமதி.

மூன்று சகோதரிகளில் சாருமதி மிகுந்த பக்தி கொண்டவர். அவர் போகாத கோயிலே கிடையாது. அனைத்து பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாடுவர். மூன்று பேரும் எத்தனை பொறுப்புகள் வந்தாலும், சகோதரத்துவத்தை விட்டு கொடுத்ததில்லை. மூவரும் ஒன்றாக அடிக்கடி வெளியில் சென்று வருவார்கள், குறிப்பாக கோவிலுக்கு. அம்மாவின் ஆசைப்படி சகோதரிகள் காசிக்கும் சென்று வந்துள்ளனர்.

சாருமதி நன்றாக படிக்க கூடியவர் என துர்கா ஸ்டாலின் அடிக்கடி கூறியுள்ளார். அவர் டாக்டருக்கு படிக்க வேண்டியவர் என்றும் துர்கா கூறியுள்ளார்.

Emotional bondage of Durga Stalin & Sister | Nayaki TV

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Durga stalin bonding with sister charumathi is unconditional love