Breakfast Recipe In Tamil, Healthy Ragi Paniyaram: ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமாக தொடங்க வேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பம். அதனால் தான் உங்களுக்காக ஆரோக்கியத்துடன் சுவையான காலை உணவு வகைகளை ஐ.இ தமிழ் தளத்தில் தவறாமல் பகிர்ந்து கொள்கிறோம். ராகி மாவை பயன்படுத்தி நிறைய சமையல் வகைகளைத் தயாரிக்க முடியாது என்று பலர் நினைக்கும் வேளையில், உங்களுக்குப் பிடித்த சில சூப்பர் ரெசிபிகளுடன் ராகியை சேர்த்து செய்யலாம், என்பதை நாங்கள் நினைவுப்படுத்துகிறோம். அதை எப்படி செய்வது என்று யோசிக்கிறீர்களா? அந்த எளிய முறையையும் உங்களுக்காக இங்கே பதிவிடுகிறோம்.
சொந்த காசுல இப்படி சூனியம் வச்சிக்கிட்டியேமா அஞ்சலி…
’மேக்னா’ஸ் ஃபுட் மேஜிக்’ புகழ், மேக்னா காம்தார் இங்கே ராகி பணியாரம் எப்படி செய்வதென நமக்கு சொல்லித் தருகிறார்.
https://www.instagram.com/tv/CD8QCTLnJ7G/?utm_source=ig_web_copy_link
தேவையான பொருட்கள்
1 கப் - திணை/ ராகி மாவு
¼ கப் - ரவை (விருப்பப்பட்டால்)
¼ கப் - அரிசி மாவு (மொறுமொறுப்புக்காக)
½ கப் - தயிர் (தண்ணீரில் நீர்த்த)
சிறிது தண்ணீர்
உப்பு - சுவைக்கேற்ப
நன்றாக நறுக்கிய கேரட்
நன்றாக நறுக்கிய மிளகாய்
நன்றாக நறுக்கிய வெங்காயம்
நன்றாக நறுக்கிய கொத்தமல்லி
நன்றாக நறுக்கிய தக்காளி
நன்றாக நறுக்கிய முந்திரி / வேர்க்கடலை (விரும்பினால்)
துருவிய தேங்காய் (விரும்பினால்)
1/2 தேக்கரண்டி - சமையல் சோடா
சிறிதளவு - எண்ணெய்
சிறிதளவு - எள்
செய்முறை
* கலக்கும் கிண்ணத்தில் 1 கப் திணை அல்லது ராகி சேர்க்கவும்.
* பின்பு ¼ கப் ரவை, ¼ கப் அரிசி மாவு மற்றும் ½ கப் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
* சிறிது தண்ணீர் சேர்த்து, கலவை கெட்டியாகும் வரை நன்றாக மிக்ஸ் செய்யவும்.
* இந்த கலவையை குறைந்தது 1 மணி நேரம் அப்படியே விடவும்.
* இப்போது, மாவு முன்பை விட கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளலாம்.
* நன்றாக நறுக்கிய கேரட், மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி மற்றும் முந்திரி / வேர்க்கடலை ஆகியவற்றை சேர்க்கவும்.
* இதோடு துருவிய தேங்காயைச் சேர்க்கவும் (இது ஒரு நல்ல சுவையையும் சிறிது இனிப்பையும் கொடுக்கும்).
* பின்னர் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடாவைச் சேர்க்கவும். (ஒருவேளை இந்த மாவை 3-4 மணி நேரம் வைத்திருந்தால், சோடாவை தவிர்க்கலாம். அது இயற்கையாகவே புளிக்கும்)
இப்போது பணியார சட்டியில், அனைத்து குழிகளிலும் சிறிது எண்ணெய் விட்டு, ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றவும்
* மூடியை மூடி, மெதுவாக நடுத்தர தீயில் 7-8 நிமிடங்கள் வேக விடவும்.
* பின்னர் மூடியைத் திறந்து ஒவ்வொரு துண்டின் மீதும் சிறிது எண்ணெய் விட்டு, மறுபுறம் புரட்டவும்.
*ஆரோக்கியமான ராகி பணியாரம் இப்போது தயார்!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”