பாத வெடிப்பு.. சுலபமாய் விரட்டும் வழிகள்!!!

பொருத்தமில்லாத செருப்பினை அணிவது என ஏகப்பட்ட காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

பெண்களுக்கு பாத வெடிப்பு  வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.  வீட்டில் பாத்திரம் கழுவுவது, உப்பு தண்ணீர்  அதிகளவில் கால்களில் படுவது,  பொருத்தமில்லாத செருப்பினை அணிவது என ஏகப்பட்ட காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

ஆனால், வாராத்திற்கு ஒரு முறையாவது இந்த வழிமுறைகளை கைப்பிடித்தால் எளிதில், உங்களின்  பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலாம். பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் அதற்கான உயர்தர சிகிச்சை பெற்றாலும்  குணமாக நாளாகும். ஆனால், உண்மையில் இதற்கான  முழுமையான தீர்வு இயற்கை வழியில் தான் உள்ளது.

இதோ அந்த இயற்கை வைத்தியங்கள்…

1. கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

2.  மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்பு தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

3.  பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.

4. செயற்கை நூலினால் செய்யப்பட்ட கால் உறைகளைத் தவிர்த்து, காட்டன் கால் உறைகளை உபயோகியுங்கள்.

5. பாதங்களை எலுமிச்சைப் பழத்தோலால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நன்றாகத் தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும்.

6. பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு மறைந்து விடும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close