விந்தணுக்கள் தரம் குறைவதற்கு பலதரப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் முதன்மையானதாக கருதப்படுவது உடல் உஷ்ணம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, உடல் வெப்பம் அதிகரிப்பதால் விந்தணுக்கள் குறைபாடு உருவாகும். இறுக்கமான ஆடைகள் அணிவது, இருசக்கர வாகனங்களில் நீண்ட நேரம் பயணிப்பது போன்றவையும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.
இவற்றை தடுப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. இனிப்புச் சுவையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் பித்தம் தணியும். இதனால் உஷ்ணமும் கணிசமான அளவு குறைந்து விடும். இவ்வாறு உஷ்ணம் குறைந்தால் ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாகும்.
அதன்படி, விந்தணுக்களை ஆரோக்கியமாக மாற்றுவதற்கு சித்த மருத்துவத்தில் லேகியங்கள் வழங்கப்படுகிறது. தாதுகல்ப லேகியம், மதனகாமேஸ்வர லேகியம், ஓரிதழ் தாமரைச் சூரணம், அமுக்கரா சூரணம் போன்றவற்றை தேனுடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும், நாட்டுச் சர்க்கரை போன்ற இனிப்பு வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
எனினும், பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக கருதுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த மருந்துகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.