தினமும் இத்தனை ஸ்டெப்ஸ் நடந்து பாருங்க… படுத்த உடன் தூக்கம் வரும்; டாக்டர் வேணி

இரவு நன்றாக தூக்கம் வருவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் நாம் பார்க்கலாம்.

இரவு நன்றாக தூக்கம் வருவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் நாம் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Sleeping tips

சிலருக்கு படுத்த உடனேயே நன்றாக தூக்கம் வரும். ஆனால், பலரும் தூங்குவதற்கு சிரமப்படுகின்றனர். அதன்படி, இரவு நேரத்தில் நன்றாக உறங்குவதற்கான சில டிப்ஸ்களை மருத்துவர் வேணி குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

முதலாவதாக குறிப்பிட்ட நேரத்திற்கு படுக்கைக்குச் சென்று பழக வேண்டும். உதாரணத்திற்கு, இரவு 10  மணிக்கு உறங்கச் செல்வது என்று முடிவு செய்தால், தினசரி அந்த நேரத்தை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தூங்கும் நேரத்தை மாற்றுவது நம் உறக்கத்தை பாதிக்கும் என்று மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார்.

படுக்கை அறையை அதற்கு ஏற்றார் போல் இருட்டாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, தூங்கச் செல்வதற்கு முன்பாக அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் வேணி அறிவுறுத்துகிறார். இது சீரான உறக்கத்திற்கு வழிவகுக்கும்.

நாம் தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவை சாப்பிட்டு முடிக்க வேண்டும். அதுவும் எளிதாக செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்வது தூக்கத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

Advertisment
Advertisements

பெரும்பாலானவர்களுக்கு பகல் நேரத்தில் உடல் உழைப்பு போதுமான அளவு இருக்காது. இதுவும் தூக்கத்தை பாதிக்கும் ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது. எனவே, ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பது, சீரான தூக்கத்திற்கு உதவி செய்யும் என்று மருத்துவர் வேணி கூறுகிறார்.

இவை அனைத்தையும் தொடர்ச்சியாக பின்பற்றும் போது, இரவு நேரத்தில் நன்றாக தூங்க முடியும் என்று மருத்துவர் வேணி அறிவுறுத்துகிறார்.

நன்றி - Neuro Doctor Tamil Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Best tips to maintain healthy sleep

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: