scorecardresearch

தினமும் 60 கிராம் பாதாம்… பெண்களின் இந்தப் பிரச்னைக்கு இதுதான் தீர்வு!

பாதாம் பருப்பில் ஆல்கா டோகோபெரால் மற்றும் நிறைவுறா கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்து கூறுகளை கொண்டுள்ளதால், முழு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் 60 கிராம் பாதாம்… பெண்களின் இந்தப் பிரச்னைக்கு இதுதான் தீர்வு!

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, மக்கள் தங்களது உணவு முறையில் பல்வேறு சிக்கலான மாற்றங்களை ஏற்படுத்தி வந்தாலும், சுலபமான முறையில் அவற்றை மேற்கொள்ளும் உத்தியை தெரிந்து வைத்துக் கொண்டால் இன்னும் எளிது. அமெரிக்காவின் கலிப்போர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, பாதாம் பருப்பின் நன்மைகள் குறித்து அறிய ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது. ஆய்வு மாதிரிகளாக வந்த தன்னார்வலர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, ஒரு குழுவைச் சேர்ந்த பெண்களை பாதாம் பருப்பை சிற்றுண்டியாக சாப்பிட வைத்தனர். பாதாம் பருப்பை சிற்றுண்டியாக எடுத்துக் கொண்ட பெண்களின் ஒரு நாளைக்கு தேவையான கலோரிகளில், 340 கலோரிகள் பெறப்படுகிறது.

அந்த வகையில், பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டு வர, நிலையான எதிர்ப்புச் சக்தியை பெறுவதோடு இன்னும் சில பயன்களையும் அடையாலாம். மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்கள், தினசரி பாதாம் பருப்பை 60 கிராம் அளவில் சாப்பிட்டு வர முகத்தில் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மற்றும் மெலானின் குறைபாட்டினால் ஏற்படும் தோல் தொடர்பான நோய்களை போக்கலாம்.

பாதாம் பருப்பை சிற்றுண்டியாக மட்டுமல்லாமல், ஆல்கா டோகோபெரால் மற்றும் நிறைவுறா கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்து கூறுகளை கொண்டுள்ளதால், முழு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம் என ஆராய்ச்சியின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Eating almonds daily may help reduce facial wrinkles pigmentation in some women