தினமும் அரிசி உணவு எடுத்துக் கொள்பவரா நீங்கள்???

சரி தினமும் அரிசி உணவை எடுத்துக் கொள்பவர்கள் அதை எப்படி மெயிண்டன் செய்ய வேண்டும் என்று தெரியுமா

நாம் அரிசி உணவுகளைச் சாப்பிட பழகிவிட்டோம். அதனால், அரிசி கெட்டது என்பது கிடையாது. பாலிஷ் செய்யப்பட்ட அரிசியைச் சாப்பிடுவதால் பலன்கள் கிடைக்க போவதில்லை. பாலிஷ் செய்யப்படாத கைக்குத்தல் அரிசி நல்லது. எல்லா நாளும் அரிசியை மட்டுமே சாப்பிடாமல், தினம் ஒரு சிறுதானியம் எனச் சாப்பிட்டு வந்தால் டாக்டரின் கிளினிக் பக்கம் போக வேண்டிய அவசியம் இருக்காது.

சிலர், உடல் நலத்தின் மீது மிகத் தீவிரமான அக்கறை கொண்டிருப்பவர்கள், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் இந்த அரிசி உணவைச் சாப்பிடக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என பலவகைகள் உள்ளன.   சரி தினமும் அரிசி உணவை எடுத்துக் கொள்பவர்கள் அதை எப்படி மெயிண்டன் செய்ய வேண்டும்  என்று தெரியுமா..

1. அரிசி என்பது நெல்லரிசி மட்டும் இல்லை; வாரத்தில் மூன்று நாட்களுக்கு தினை அரிசி, கம்பரிசிச் சோறு சாப்பிடுவது சிறந்தது.

2. மற்ற அரிசி வகைகளை விட பாஸ்மதி அரிசியில் நிறைய பைபர் அடங்கியுள்ளது. இதில் பல வகையான உணவு வகைகளை தயாரிக்கலாம். இதன் மற்றொரு சிறப்பு, இந்த அரிசிக்கு என்று தனியாக மணமும், சுவையும் உண்டு. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் சில வேதி குணங்களும் அடங்கியிருக்கிறது.

3. மெல்லிய உடல்வாகு வேண்டும் என்பதற்காக, பெண்கள் அரிசியைத் தவிர்ப்பது தவறு. அரிசியைத் தவிர்த்துவிட்டு, வெறும் கோதுமை உணவை உண்பது கர்ப்பப்பை சூட்டை அதிகரிக்கும்.

4. பச்சரிசியை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும். உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம்.

5. அரிசி எவ்வளவு பழையதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நல்லது. குறைந்தபட்சம் 6 மாதமான பழைய அரிசியையே உபயோகப்படுத்த வேண்டும்.

6. பயிரிடப்படாத நெல் வகையல்லாத மரவகை மூங்கிலரிசி தான் இருப்பதிலேயே சிறந்த அரிசி. எல்லா மூங்கில்களிலும் அரிசி கிடைக்காது, குறிப்பிட்ட சில மூங்கில் வகைகளில் மட்டுமே இருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close