Advertisment

டேஸ்டி முட்டை பிரியாணி: குக்கரில் இப்படி செய்து பாருங்க!

simple steps to make egg biryani in tamil: பிரியாணி செய்வது சுலபம் தான் ஆனால் நாம் தான் கடினம் என்று நினைக்கிறோம். பழகப்பழக பாலும் புளிக்க தானே செய்யும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
egg biryani tamil: muttai biryani making in tamil

muttai biryani tamil: பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்றாக 'பிரியாணி' இன்று உருவெடுத்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. தற்போது பிரியாணி கடைகளை நோக்கி எல்லா நாட்களிலும் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரியாணி கடைகள் தோன்றி வருகின்றன.

Advertisment

இப்படி பிரியாணி மோகத்தால் பெருகி வரும் கடைகளில் நிலையான சுவை இருப்பதில்லை. பிரியாணியில் சேர்க்கப்படும் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் பாரம்பரியமாக பிரியாணி தயார் செய்து வந்த க டைகளின் சுவையும் கேள்விக் குறியாகியுள்ளது. மேலும், நல்ல
பிரியாணி தயார் செய்து விற்கும் கடைகளை கண்டுபிடிப்பது அரிதான ஒன்றாகவும் உள்ளது.

இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க நம்முடைய வீட்டிலேயே சுவையான பிரியாணி செய்து அசத்தலாம். பிரியாணி செய்வது சுலபம் தான் ஆனால் நாம் தான் கடினம் என்று நினைக்கிறோம். பழகப்பழக பாலும் புளிக்க தானே செய்யும்.

சரி, இப்போது டேஸ்டியான முட்டை பிரியாணி எப்படி தாயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.

அவித்த மசாலா முட்டை :

முட்டை - 3 - 4 (வேகவைத்து - 4 இடத்தில் கீறியது)

ஒரு பாத்திரம் எடுத்து எண்ணெய் விட்டு சூடேற்றவும். பிறகு அதில்,

மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீ ஸ்பூன் ஆகிய மசாலா பொருட்களை இட்டு மிதமான சூட்டில் வைத்து வறுத்துக்கொள்ளவும். பின்னர் அவித்த முட்டைகளை அதில் இட்டு கிளறிய பிறகு தனியாக எடுத்து வைக்கவும்.

publive-image

முட்டை பிரியாணி செய்யத் தேவையான பொருட்கள்:

எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
அண்ணாச்சி பூ - 1
கல்பாசி - சிறிதளவு
பிரியாணி இலை - 2
சோம்பு - 1 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)
புதினா தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்
தக்காளி - 1
கல் உப்பு - தேவையான அளவு

மசாலா பொருட்கள்

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்

தயிர் - 2 டீ ஸ்பூன் (விரும்பினால்)
அரிசி - பாஷ்மதி அரிசி (20 நிமிடங்கள் ஊற வைத்தது) - 2 கப்

publive-image

முட்டை பிரியாணி ஈஸியான செய்முறை:

முதலில் ஒரு குக்கர் அல்லது பாத்திரம் எடுத்து சூடேற்றவும். பிறகு மேலே வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

தக்காளி நன்கு மசிந்து வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து கிளறி கொள்ளவும். தயிர் விரும்பினால் சேர்க்கலாம்.

பிறகு அரிசி வேக தேவையான தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து முன்னர் ஊறவைத்துள்ள அரிசியை அவற்றுடன் சேர்க்கவும்.

இப்போது முன்னர் தயார் செய்து வைத்துள்ள மசாலா முட்டை மற்றும் புதினா தழைகளை சேர்த்து குக்கர் என்றால் 2 விசில் வந்த பிறகு கீழே இறக்கவும். பாத்திரம் என்றால் அரிசி முக்கால்வாசி வெந்த பிறகு இறக்கி ஒரு மூடியால் மூடி வைத்துக்கொள்ளவும்.

சில நிமிடங்கள் கழித்து மூடியை அகற்றிவிட்டு பார்த்தல் நீங்கள் விரும்பிய சுவையான முட்டை பிரியாணி தயாராக இருக்கும். இது கடைகளில் கிடைக்கும் பிரியாணியை போல் அல்லமால் தனித்துவனமான சுவையுடையதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

இந்த சுவைமிகுந்த முட்டை பிரியாணியை நீங்களும் ஒரு முறை முயற்சிக்கலாமே மக்களே!!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Life Food Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Briyani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment