முட்டை சாப்பிட்டால் இதய நோய் வருமா ? ஷாக் தரும் சர்வதேச இதழ்

மார்ச் 25,195 முதல் ஆகஸ்ட் 31, 2016 வரையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Egg consumption per day : புரதம் மற்றும் டையட்ரி கொலஸ்ட்ரால் கொண்டுள்ள மிக முக்கியமான உணவுகளில் ஒன்று தான் முட்டை. நாள் ஒன்றிற்கு எத்தனை முட்டைகள் உண்ண வேண்டும் என்பது தொடர்பாக பலருக்கும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

சமீபத்தில் வெளியான சர்வதேச இதழ் JAMA -வில் அளவுக்கு அதிகமாக முட்டைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், இதய நோய்கள் வருவதற்காக வாய்ப்புகள் அதிகமாகும் என்று குறிப்பிட்டிருந்தது.

அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கை

அமெரிக்காவில் 17. 5 வருடங்களில் கிட்டத்தட்ட 29,615 இளைஞர்களிடம் இந்த பரிசோதனையை மேற்கொண்டு அதன் படி முடிவுகளை அறிவித்திருக்கிறது. நாள் ஒன்றிற்கு கூடுதலாக 300 மில்லி கிராம் டையட்ரி கொலஸ்ட்ராலை உணவில் எடுத்துக் கொண்டால், உயிரைக் கொல்லக் கூடிய இதய நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 25,195 முதல் ஆகஸ்ட் 31, 2016 வரையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 5400 நபர்களுக்கு சிவிடி எனப்படும் கார்டியோவாஸ்குலர் பிரச்சனைகள் ஏற்பட்ட்டதாகவும், அதில் 2088 நபர்களுக்கு இருதய நோய் ஏற்பட்டதாகவும், 1302 நபர்களுக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும் ஆய்வறிக்கை தகவல்கள் வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையால் முட்டையை அதிகம் விரும்பி உண்ணும் மக்கள், முட்டை உண்பது ஆரோக்கியமான விசயம் என்றால் நாள் ஒன்றிற்கு எவ்வளவு முட்டைகள் சாப்பிடவேண்டும் என்ற குழப்பத்தில் உள்ளனர்.  இதற்கு முன்பான ஆய்வுகளில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திட, இரத்த அழுத்தத்தை குறைக்க முட்டை உதவும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தொடர் வாதங்களை சமூக வலைதளங்களில் மக்கள் முன்வைக்க, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் சிக்காகோவில் இருக்கும் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கலத்தின் ஃபெய்ன்பெர்க் மருத்துவக் கல்லூரில் ப்ரெவெண்டிவ் மெடிசன் துறையின் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் நொரினா அலேன்.

“ஒருவர் முற்றிலுமாக முட்டையை தவிர்த்துவிட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அளவுக்கு அதிகமாக உண்டால் நிச்சயம் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அதனை கருத்தில் கொள்ள வேண்டும். அதிக முட்டைகளை உண்ண விரும்புகிறவர்கள், முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க : Weight loss tips: கடும் உடற்பயிற்சி…. கடும் டயட்…. இது போதுமா உடல் எடை குறைக்க?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close