Weight loss tips: ஒரு மாதத்திற்கு எவ்வளவு எடை உங்களால் குறைக்க முடியும்? இதை முதலில் என்றாவது யோசித்து கணக்கிட்டு செயல்பட்டு இருக்கிறீர்களா? கடுமையான உடற்பயிற்சி, கடுமையான டயட் போன்றவை மட்டும் எடை குறைக்க காரணிகளாக அமைந்துவிடுவது இல்லை. திட்டமிடுதல் மிக மிக அவசியம்.
இலக்கே இல்லாமல், உழைப்பை மட்டும் கொடுத்தால், எடை குறைவது குறித்த எந்த புரிதலும் இல்லாமல் போய்விடும். ஒருக்கட்டத்தில் நீங்கள் சோர்ந்து, உடற்பயிற்சியை கூட நிறுத்த நேரிடும்.
நம்மில் பலரும், உடலைக் குறைக்கிறேன் என சபதம் எடுத்து இப்படி வீணாய்ப் போனதுண்டு.
மேலும் படிக்க – வெயிட்டைக் குறைக்க ஏன் ஓடணும் தெரியுமா?
ஆகையால், ஒரு மனிதனால் வாரத்தில் எவ்வளவு கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியும் என்பதற்கான விடையை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
நோய்த் தடுப்பு மற்றும் காத்தல் அமைப்பின் அறிக்கை படி, ஒரு மனிதனால், வாரத்திற்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை எடை குறைக்க முடியுமாம்(உங்கள் உடல் எடையைப் பொறுத்து). மாதத்திற்கு 2 கிலோ முதல் 4 கிலோ வரை மட்டுமே குறைக்க முடியுமாம். கலோரிகளை எரிப்பதன் மூலமே, உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது நமக்கு தெரியும். ஒரு பவுண்ட் எடையை (0.45 கி) குறைக்க, நீங்கள் 35,000 கலோரிகளை எரிக்க வேண்டும்.
மேலும் படிக்க – அதிரடியாக தொப்பையைக் குறைக்கும் சூப் இது தான்!
ஆய்வின் படி, ஆரோக்கியமான முறையில் நீங்கள் எடை குறைக்க வேண்டுமெனில், ஒரு நாளைக்கு 500 – 1000 கலோரிகளை, குறைவான உணவு எடுத்துக் கொள்ளுதல் மற்றும் அதிக உடற்பயிற்சி செய்வதன் மூலம் எரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Weight loss tips