Advertisment

சுவையான பொடிமாஸ் தோசை: இப்படிச் செய்தால் குழந்தைகளுக்குப் பிடிக்கும்!

Egg Podimas Dosa Making Tamil Video: சுவையாக இந்த ரெசிபியை செய்து ரசித்து, ருசித்து சாப்பிட்டு மகிழுங்கள் மக்களே!

author-image
WebDesk
New Update
சுவையான பொடிமாஸ் தோசை: இப்படிச் செய்தால் குழந்தைகளுக்குப் பிடிக்கும்!

Egg Dosa Tamil, Egg Podimas Dosa Making Tamil Video: மருத்துவரிடம் சென்ற பெண் ஒருவர், ‘டாக்டர், என் குழந்தை ஒழுங்கா சாப்பிடறதே இல்லை’ என்றார். குழந்தைக்கு வேறு எந்த தொல்லையும் இல்லை. டாக்டர் சிம்பிளாகச் சொன்னார், ‘குழந்தைக்கு பிடிக்கிற மாதிரி, சாப்பாடு செஞ்சு கொடுங்க’ என்று!

Advertisment

நிஜம் மக்களே! குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள் என்பது நோய் அல்ல. அவர்கள் விரும்புகிற மாதிரி நாம் சமைக்க முயற்சிக்கலாம். அப்படி குழந்தைகள் விரும்புகிற மாதிரியான ‘டிஷ்’தான் பொடிமாஸ் தோசை.

Egg Podimas Dosa Making Tamil Video: பொடிமாஸ் தோசை

முட்டை பொடிமாஸ் தோசை செய்யும் முறையை இங்கு பார்க்கலாம். முதலில் தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு, முட்டை - 4, உப்பு - தேவைக்கேற்ப. எண்ணெய் - தேவைக்கேற்ப, மிளகாய் தூள் - தேவைக்கேற்ப, தோசை மாவு - தேவைக்கேற்ப

முட்டை பொடிமாஸ் தோசை செய்முறை வருமாறு :

முதலில் வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

இவை நன்றாக வதங்கிய பிறகு 4 முட்டையை அதில் உடைத்து ஊற்றவும். அடுப்பை ‘சிம்’மில் வைத்துவிட்டு முட்டை அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறவும். முட்டையை நன்றாக வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும். இப்போது முட்டை பொடிமாஸ் தயார்.

அடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசைக்கு மாவு எடுத்து முழு அளவில் ஊற்றாமல் சற்று சின்னதாக ஊற்றி, முட்டை பொடிமாஸை ஒரு கரண்டி அளவு போட்டு நன்றாக அமுக்கி விடுங்கள். தோசை மாவில் முட்டை பொடிமாஸ் நன்றாக அமுங்கி இருக்க வேண்டும். பின் தோசையை திருப்பி போட்டு நான்றாக வெந்ததும் எடுக்க வேண்டும். இப்போது முட்டை பொடிமாஸ் தோசை தயார்!

குழந்தைகள் இந்த தோசையை ஸ்நாக்ஸ்போல விரும்பிச் சாப்பிடுவார்கள். முட்டை சேர்க்கப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சத்தான உணவாக எடுத்துக் கொள்ளலாம். சட்னி, சாம்பார் இல்லாமலேயே இதை உண்ண முடியும். கார சட்னி, தக்காளி தொக்கு, சிக்கன், மட்டன் கிரேவி ஏதாவது ஒன்றுடனும் தொட்டு சாப்பிடலாம்.

சுவையாக இந்த ரெசிபியை செய்து ரசித்து, ருசித்து சாப்பிட்டு மகிழுங்கள் மக்களே!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment