முட்டை அதிக சத்துக்கொண்ட ஆரோக்கியமான உணவு. ஆம்லெட், அரை வேகவைத்த முட்டை, முட்டை கறி அல்லது முட்டை வறுத்தது எதுவாக இருந்தாலும், ஒரு சில முட்டைகளை மட்டுமே கொண்டு நீங்கள் செய்யக்கூடிய பல உணவுகள் உள்ளன.
முட்டையை அதிகம் காலை உணவில் சேர்ப்பதுதான் வழக்கம். பெரும்பாலும் சமையல் ரெியாதவர்கள் முட்டையில் ஏதாவது ஒரு உணவு செய்யலாம்.
மும்பையைச் சேர்ந்த ஆல்பா மோடி என்பவர், முட்டைகளை எவ்வாறு சமைப்பது என கூறுகின்றார், அதில் அவர், “ நீங்கள் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சூடாக்க வேண்டும். அடுத்து, ஒரு துளையிட்ட ஸ்பேட்டூலா வழியாக முட்டை யை கடாயில் ஊற்ற வேண்டும். இப்போது மெதுவாக முட்டைகளைத் கிளறி விடுங்கள் முட்டைப்பொரியல் ரெடி என்றார்.