Energy level increasing foods: பெரும்பாலும், நம்மில் பலர் சோர்வாக உணர்கிறோம், பகலில் பசியின்மையை கூட அனுபவிக்கிறோம். ஆனால் வெறும் வயிற்றில் தூங்குவதைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, ஒருவர் எப்போதும் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அத்தகைய ஒரு சத்தான உணவாக தயிர் சாதம் உள்ளது என பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் குறிப்பிடுகிறார். இது ஒருவருக்கு மனநிறைவைத் தருவது மட்டுமல்லாமல், புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாகும். மேலும் தயிர் சாதம் உட்கொள்வது ஆரோக்கியமான நுண்ணுயிர் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது என்றும், இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது என்றும் ருஜுதா சுட்டிக்காட்டியுள்ளார்.
தயிர் சாதத்தில் கால்சியம் மற்றும் நல்ல கொழுப்புகள் அதிகம் இருப்பதால், அவற்றை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் உடலில் உள்ள மற்ற உணவுகளிலிருந்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது.
சரி, இப்போது நமது உடலில் ஆற்றல் அளவை உயர்த்துவதற்காக ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் குறிப்பிட்டுள்ள தயிர் சாதம் எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேகவைத்த சாதம் ஒரு கிண்ணம்
2 டீஸ்பூன் - தயிர்
கல் உப்பு - சிறிதளவு
செய் முறை
மூன்றையும் ஒன்றாக நன்றாக மிக்ஸ் செய்து பரிமாறி மகிழவும்.
நன்மைகள்
இப்போது நாம் தயார் செய்த இந்த தயிர் சாதத்தின் நன்மைகளை இங்கு பார்க்கலாம்.
* குடலுக்கு நல்லது
* ஆற்றல் மட்டங்களை (எனர்ஜியை) மேம்படுத்துகிறது.
* நோய் எதிர்ப்பு சக்தியை (இம்யூனிட்டியை) அதிகரிக்கும்.
* தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.