பிஎஃப் தொடர்பான குறைபாடுகளுக்கு உடனடி தீர்வு - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தனது அமைச்சகத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் உள்ள பொது குறைபாடுகளை அகற்றுவது சம்மந்தமாக படிப்படியாக மதிப்பாய்வு செய்து நெறிப்படுத்தி வருகிறது

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் (Employees Provident Fund Organisation) மற்றும் ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (Employees State Insurance Corporation) தொடர்பான குறைபாடுகள் உடனடியாக தீர்க்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தனது அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம், ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள மற்ற நிறுவனங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதர்க்காக அமைச்சகத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் நெறிப்படுத்தப்பட்டு வருகிறது என கடந்த திங்கள் கிழமை கூறியுள்ளது. கடந்த 2019 ஆண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட இணையதளத்தில் உள்ள குறை தீர்க்கும் மேலாண்மை அமைப்பில் (EPFi Grievance Management System EPFiGMS) பதிவான 9,02,203 புகார்களில் 8,38,579 புகார்கள் நிவர்த்திசெய்யப்பட்டுள்ளன, என மக்களவையில் அளிக்கப்பட்ட எழுத்து பூர்வமான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி திட்ட( PPF) பயனாளர்களா நீங்க? அதிரடி மாற்றங்களுக்கு ஏற்ப தயாராவீர்…

தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தனது அமைச்சகத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் உள்ள பொது குறைபாடுகளை அகற்றுவது சம்மந்தமாக படிப்படியாக மதிப்பாய்வு செய்து நெறிப்படுத்தி வருகிறது, என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வர் சபையில் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம், ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம், முதன்மை தொழிலாளர் ஆணையர் (மத்திய), ஆகியவை தொடர்பாக வரும் புகார்களும் இவற்றுள் அடங்கும். புகார்களை விரைவாக நிவர்த்தி செய்வதர்க்காக முறையான சீர்த்திருத்தங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமாக துவக்க முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என அமைச்சர் தெரிவித்தார். இந்த அமைச்சகம் தொடர்பாக மையமாக்கப்பட்ட பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிக்கும் அமைப்பில் (Centralised Public Grievances Redress and Monitoring System (CPGRAMS) 2019 ல் வந்துள்ள புகார்களின் எண்ணிக்கை 47,567 அவற்றில் 46,283 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ள என அவர் மேலும் தெரிவித்தார்.

PF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இத்தனை நன்மைகளா? : உடனே இணைப்பீர்…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close