இனிமே மழைக்காலம்தான். உங்க குழந்தைகளை கவனமா பாத்துக்கங்க!

மழைப்பருத்தில் காற்று, மிகவும் ஈரப்பதத்துடன் இருப்பதால் வீடுகளினுள் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் பரவ வழிசெய்கிறது. குறிப்பாக பிறந்த குழந்தைகள் இதனால் நோய்வாய் படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

மழைக்காலத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க பயனுள்ள சில குறிப்புகள் இங்கே!

கடுமையான வெப்பத்திலிருந்து ஓய்வுபெற, மழைக்காலம் தேவை. ஆனால் இந்த பருவத்தில், நனைந்த குடைகள், அழுக்கு காலணிகள், ஒழுகும் குழாய்கள், ஈர சுவர்கள், உலராத துணிகள் போன்றவையில் இருந்து வரும் கிருமிகள் மற்றும் அழுக்குகளிடமிருந்து பெற்றோர் மிகவும் கவனமுடம் இருக்க வேண்டும். மேலும் மழைப்பருத்தில் காற்று, மிகவும் ஈரப்பதத்துடன் இருப்பதால் வீடுகளினுள் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் பரவ வழிசெய்கிறது. குறிப்பாக பிறந்த குழந்தைகள் இதனால் நோய்வாய் படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால் வெளியில் இருந்து வீடு திரும்பும் பெற்றோர் குழந்தைகளை தொடுவதற்கு முன்பாக கிருமிநாசினி சோப்புகளை கொண்டு உங்களின் கைகளை நன்றாக, கழுவுங்கள். மேலும் நோய்வாய் பட்டவர்களிடம் இருந்து, குழந்தைகளை சற்று விலகி வைப்பது நல்லது. பருவமழைக்கு முன்பாக உங்கள் வீட்டில் உள்ள கசிவுகள் மற்றும் ஈரமான பகுதிகளை சரிசெய்து, பாதுகாப்பான கொசுவிரட்டிகளை பயன்படுத்துங்கள். குழந்தைகளுக்கு சளி அல்லது லேசான காய்ச்சல் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனே குழந்தைநல மருத்துவரை அணுகுங்கள்.

குழந்தைகளை சுத்தமாக வைத்திருங்கள்!

குழந்தைகளை தினசரி குளிப்பாட்டுங்கள், கழுத்து, அக்குள், பிறப்புறுப்பு மற்ற உறுப்புகள் மற்றும் உடல் மடிப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.  குளிப்பாட்டுவதற்கு முன், பேபி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், குழந்தைகளின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். குளிப்பாட்டிய உடன் துடைப்பதற்கு சுத்தமான, காய்ந்த துண்டுகளை பயன்படுத்துங்கள். குழந்தை வளர்ச்சியின் ஆரம்பகட்டத்தில், அவர்களின் சரும பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மென்மையான மாய்சரைசர்களைக் கொண்டு குழந்தையின் உடல் முழுவதும் தேய்த்து விடுங்கள்.

லேசான, காட்டன் துணிகளை உபயோகியுங்கள்!

மழைக்காலத்தில் பொதுவாக, குளிருடன் வெக்கையும் இருப்பதால், குழந்தைகளை வெளியே எடுத்து செல்லும்போது, காட்டன் உடையில் நன்கு மூடப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இரவில் தூங்கும் போது, ​​ சிறிய ஆடைகளை அணிவிக்காமல், தலை முதல் கால் வரை மூடும் வகையில், முழு நீள மென்மையான காட்டன் ஆடைகளை உபயோகிப்பதால் குழந்தை இடையில் விழிக்காமல் நன்றாக உறங்கும். எக்காரணத்தைக் கொண்டும், உலராத ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்காதீர்கள். மேலும் குழந்தைகளுக்கு உடுத்தும் ஆடைகளை சுமார் இரண்டில் இருந்து மூன்று மணிநேரம் வரை, சூரிய ஒளியில் நன்றாக உலரவைக்க மறக்காதீர்கள். ஈரமான ஆடைகளை அணிவது குழந்தையின் தோலில் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும்.

குழந்தைக்கு டயப்பரிலிருந்து இடைவெளி கொடுங்கள்!

டயப்பர்கள் இப்போதுள்ள மாடர்ன் தாய்மார்களின் சிறந்த நண்பன் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும்கூட உங்கள் குழந்தைக்கு டயப்பரில் இருந்து சிறிது நேரம் ஓய்வு கொடுங்கள். மழைக்காலத்தில் குழந்தைகளை வெளியே எடுத்து செல்லும் போது டயப்பர்களை உபயோகிக்க அவசியம் பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல் வீட்டில் இருக்கும்போது  டயப்பர்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு ஓய்வு கொடுத்து அவர்களின் சருமம் சுவாசிப்பதை உறுதிப்படுத்துங்கள். டயப்பர்களை தொடர்ந்து உடயோகிப்பதன் மூலம், சிலநேரங்களில் குழந்தைகளின் சருமத்தில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி ஏதும் ஏற்பட்டால், மெல்லிய துணி அல்லது வைப்ஸ்களை பயன்படுத்தி, அந்த இடத்தை துடைத்த பிறகு, அலர்ஜிக்கான ஆயிண்மண்ட் அல்லது கிரீம்களை தடவுங்கள்.

அறைவெப்பநிலையை சீராக வையுங்கள்!

பெரும்பாலான சமயங்களில், சீரான வெப்பநிலையில் வளரும் குழந்தைகள் சிறப்பாக செயல்படுகின்றன. அதனால் உங்கள் அறையின் வெப்பநிலை 28ல் இருந்து 30 டிகிரி செல்சியசுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது மிகவும் குளிராகவும்,  சூடாகவும் இல்லாமல் நடுநிலையில் இருக்கும். குழந்தைகளுக்கு எனும் போது எடைகுறைந்த படுக்கையில், காட்டன் விரிப்புகளை பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவேளை, இரவில் உங்கள் குழந்தை குளிராக இருப்பதை உணர்ந்தால் கூடுதலாக ஒரு பெட்ஷீட்டை மூடிவிடுங்கள்.

கொதிக்கவைத்த தண்ணீர் மிகவும் முக்கியம்!

குழந்தைக்கு சரியான நீரேற்றம் அவசியம், ஆனால் அதை கொடுப்பதற்குமுன் முதலில் தண்ணீரை கொதிக்கவைக்க மறக்காதீர்கள். குழந்தைக்கு திட உணவுகளை சமைக்கும்போது ஏற்கெனவே கொதிக்கவைத்து குளிரவைத்த தண்ணீரை பயன்படுத்துங்கள். ஒருவேளை நீங்கள் இன்னும் உங்கள் குழந்தைகளுக்கு ஃபார்முலா உணவுகளைக் கொடுத்தால், அதை தயாரிக்க இந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தவும். செர்ரி, லிச்சி, ஜாமூன், பீச் மற்றும் பிளம்ஸ் ஆகிய பழங்களிலிருந்து சாறு மற்றும் கூழ் தயாரித்து குழந்தைக்கு உணவளிக்கலாம். அதிகபட்ச புரதத்துக்கு, முழுமுட்டை, சோயா, மற்றும் பருப்பு சிறந்த தேர்வாக இருக்கும்.

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்!

குழந்தைகள் நோய்வாய்ப்படுவதற்கு கிருமிகள் மற்றும் அழுக்குகள் முக்கிய காரணம் மற்றும் மழைக்காலத்தில் நீர் மூலம் பரவும் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இயற்கை பொருட்களை கொண்ட கிருமிநாசினியை பயன்படுத்தி தரை, கதவு, ஜன்னல் போன்றவற்றை சுத்தம் செய்யவும். ஃபர்னிச்சர், தரைவிரிப்புகள் மற்றும் சோபாவில் இருந்து அழுக்குகளை நீக்க வக்வம் கிளீனரைப் பயன்படுத்தவும். வீட்டிலுள்ள உள் வடிகால் அமைப்பு, தோட்டப்பகுதி, கழிப்பறை மற்றும் வீட்டின் மேற்கூரை ஆகியவற்றை அடிக்கடி கவனித்துக் கொள்ளுங்கள். அதனால் ஈரமான மூலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாது. முடிந்தவரை ஈரப்பதத்திலிருந்து விலகி இருங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Essential baby care tips during rainy season

Next Story
வீட்டில் இட்லி மாவு இருக்கா? 5 நிமிடத்தில் மெதுவடை ரெடி பண்ணுங்க!Instant Medu Vada Recipe tamil: Idli Batter Vada making in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com