தினமும் நீங்கள் செய்யும் தவறான செயல் இதுதான்.. டூத் பேஸ்ட், டூத் பிரஷ் எப்படி வாங்குறீங்க?

அடிக்கடி டூத்பேஸ்ட்டை மாற்றுவதும் தவறு.

health tips : தொலைக்காட்சியில் எந்தச் சேனலைத் திருப்பினாலும் டூத்பேஸ்ட் விளம்பரங்கள். தினமும் நாம் மறக்காமல் செய்யும் ஒரு விஷயம் பல் துலக்குவது. அதிலும் நம்மில் கிட்டதட்ட 69சதவீதம் பேர் காலை, இரவு என ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குகிறோம்.

நல்ல விலையுயர்ந்த பேஸ்ட் கொண்டு பல் துலக்குவதை கௌரவம் என்று நினைப்பவர்களும் அதற்குள் அடங்கியிருக்கிறார்கள் என்பதை நம்மால் மறுக்கவே முடியாது.

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் ஆரோக்கியமானதா என்பது தான் கேள்வி. அதனால் எத்தனை முறை பல் துலக்குகிறோம் என்பது முக்கியமே இல்லை. எப்படிப்பட்ட பேஸ்ட் கொண்டு துலக்குகிறோம் என்பது தான் முக்கியம்.

நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டுகள் தற்போது பல்வேறு பிளேவர்களில் வருகின்றன. அதையும் நமக்குப் பிடித்த பிளேவர்களில் வாங்கிக் கொள்கிறோம். அவை நம்முடைய பற்களைப் பாதுகாக்கும் என்று நம்புகிறோம். ஆனால் அவை நம்முடைய உயிருக்கே கேடு விளைவிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?… ஆம். நாம் வாங்கும் பெரும்பாலான டூத் பேஸ்ட்டுகளில் உயிர்க்கொல்லிகள் அதிகமாகக் கலக்கப்படுகின்றன.

டூத் பேஸ்ட் எப்போதும் வறட்சியடையாமல் இருக்கக் காரணம்அதில் சேர்க்கப்படும் சோர்பிடோல் என்னும் திரவம் தான். இது குழந்தைகளுக்கு டயேரியாவை உண்டாக்கிவிடும். டூத் பேஸ்ட்டில் சுவைக்காக பயன்படுத்தப்படுகிற சாச்சரின் என்னும் மற்றொரு செயற்கை இனிப்பு வகை சிறுநீர்ப்பையில் புற்றுநோயை உண்டாக்குகிறது. அதற்கு பதிலாக ஸ்டீவியா அல்லது எக்ஸ்லிடோல் என்னும் இயற்கை இனிப்பு வகை அடங்கிய டூத் பேஸ்ட் பயன்படுத்துவது நல்லது.

ஃப்ளோரைட் டூத் பேஸ்ட்தான் எல்லாப் பற்களுக்கும் ஏற்றது. அடிக்கடி டூத்பேஸ்ட்டை மாற்றுவதும் தவறு. பற்களின் பாதிப்புக்கு ஏற்ப, மருத்துவரின் ஆலோசனைப்படி பற்பசையைப் பயன்படுத்தலாம். என்ன பற்பசை, எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதைவிட, பற்பசையைக் கொண்டு எப்படி பிரஷ் செய்கிறோம் என்பதில்தான் பல்லின் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close