வயிறை மொத்தமாக குறைக்கும் இந்தப் பயிற்சி... வாட்டர் பாட்டில் 2 இருந்தா போதும்: இப்படி ட்ரை பண்ணுங்க!
அடி வயிறு மற்றும் மேல் வயிறை மொத்தமாக குறைக்க ஒரு எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றை எவ்வாறு செய்யலாம் என்று தற்போது காணலாம்.
அடி வயிறு மற்றும் மேல் வயிறை மொத்தமாக குறைக்க ஒரு எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றை எவ்வாறு செய்யலாம் என்று தற்போது காணலாம்.
இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு தொப்பை இருக்கிறது. உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், தூக்கமின்மை மற்றும் சரியான உடல் உழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் நிறைய பேருக்கு தொப்பை இருக்கிறது.
Advertisment
தொப்பையை குறைக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், அதற்கு தனியாக நேரம் ஒதுக்க முடியாத வகையில் அவர்களது பணிச்சூழல் இருக்கிறது. இதனால், ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இது போன்ற இருப்பவர்களால் நடைபயிற்சியும் செய்ய முடியவில்லை. ஆனால், உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் அவை வேறு சில பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அந்த வகையில் தொப்பையை குறைக்க ஒரு எளிமையான பயிற்சியை இதில் காணலாம்.
இதற்காக தரையில் கால்களை நீட்டி நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். அதன்பின்னர், இரண்டு பாதங்களின் அருகிலும் தண்ணீர் பாட்டில்களை வைத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, கைகளை பின்புறமாக தரையில் ஊன்றி, ஒவ்வொரு கால்களையும் தண்ணீர் பாட்டிலின் மறுபுறத்திற்கு கொண்டு சென்று, மீண்டும் அதே நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
Advertisment
Advertisements
இந்த முறை நன்றாக பழகியதும் இரண்டு கால்களையும் ஒரே சமயத்தில் இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறு 10 முதல் 15 தடவை என்ற கணக்கில் மூன்று முறை செய்ய வேண்டும். இந்த எளிய பயிற்சியின் மூலம் தொப்பையை குறைக்க முடியும்.
உடற்பயிற்சி கூடங்களுக்கோ அல்லது நடைபயிற்சியோ செல்ல முடியாதவர்கள், இந்த சிம்பிளான டிப்ஸை ஃபாலோ செய்யலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நன்றி - Ayurveda Health Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.