சர்வதேச நீரிழிவு நோய் விழிப்புணர்வு அமைபின் கருத்துப்படி, 2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – நாள்பட்ட பாதிப்பு – 40 மில்லியனில் இருந்து 70 மில்லியனாக உயரும். இது ஒரு நாள்பட்ட நோய் என்பதால், இது ஒரு ‘சைலண்ட் கில்லர்’ என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. “இந்த பாதிப்பு படிப்படியாக வளர்ச்சியடைவதால், ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் லேசானவையாக இருக்கும். அதனால், மக்கள் பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள். இது தாமதமான நோயறிதலுக்கு வழிவகுக்கிறது” என்று ஆயுஷக்தியின் இணை நிறுவனர் டாக்டர் ஸ்மிதா நரம் கூறினார்.
நீங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில இயற்கை வழிகளை தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில ஆயுர்வேத வைத்தியங்களை டாக்டர் டாக்டர் ஸ்மிதா நரம் பகிர்ந்துள்ளார். அவற்றை இங்கே தருகிறோம்.
*உங்கள் சுகர் அளவைக் குறைக்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைக்கவும். வெந்தயப் பொடியை சூடான அல்லது குளிர்ந்த நீர் அல்லது பாலுடன் தினமும் குடிக்கலாம்.
- காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடன் தண்ணீருடன் சேர்த்து சாப்பிடவும். மஞ்சள் ஒரு சிறந்த மூலிகை. இது சாதாரண சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், 2வது வகை நீரிழிவு நோயைத் தடுப்பதில் நல்ல பலன் அளிப்பதாக அறியப்படுகிறது.
*நீரிழிவு உள்ளவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம். அதிகப்படியான குளுக்கோஸை அகற்ற, சிறுநீரகங்கள் அதை சிறுநீரில் வெளியேற்ற முயற்சி செய்கின்றன. ஆனால், அது தண்ணீரையும் எடுத்துக்கொள்ளும். எனவே, உங்கள் இரத்த குளுக்கோஸ் அதிகமாக இருப்பதால், நீங்கள் அதிக தண்ணீரை குடிக்க வேண்டும். அதனால்தான், தாகம் எடுப்பது நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று என்று டாக்டர் ஸ்மிதா கூறினார்.
*உங்கள் தினசரி உணவில் இலவங்கப்பட்டையை சேர்த்துக்கொள்ளுங்கள். இலவங்கப்பட்டையில் உள்ள பயோஆக்டிவ் கலவை நீரிழிவு நோயைத் தடுக்கவும் எதிர்த்துப் போராடவும் உதவும். இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டைத் தூண்டுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டையை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் ஒரு முறை குடியுங்கள்.
*ஆப்பிள், கொய்யா, செர்ரி போன்ற புதிய பழங்களை உட்கொள்ளுங்கள்; இவை இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகின்றன. ஆப்பிள்களில் வைட்டமின் சி, கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. ஆப்பிளில் காணப்படும் பெக்டின் உடலை நச்சுத்தன்மையாக்குவதற்கும், தீங்கு விளைவிக்கும் கழிவுகள் மற்றும் நச்சுகளை அகற்றுவதற்கும், இன்சுலின் குறைப்பதற்கும் நன்மை பயக்கும். மேலும், ஆப்பிள்கள் சில புற்றுநோய், இதய நோய் மற்றும் கண் நோய், நீரிழிவு நோயின் சிக்கல்கள் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.
*ஆப்பிள், கொய்யா, செர்ரி போன்ற பிரஷ்ஷான பழங்களை சாப்பிடுங்கள். இவை இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகின்றன. ஆப்பிள்களில் வைட்டமின் சி, கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. ஆப்பிளில் காணப்படும் பெக்டின் உடலை நச்சுத்தன்மை கொண்டதாக்குகிறது. தீங்கு விளைவிக்கும் கழிவுகள் மற்றும் நச்சுகளை அகற்றுவதற்கும், இன்சுலின் குறைப்பதற்கும் நன்மை பயக்கும். மேலும், ஆப்பிள்கள் சில புற்றுநோய், இதய நோய் மற்றும் கண் நோய், நீரிழிவு நோயின் சிக்கல்கள் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.
“கூடுதலாக, ஒரு சீரான உணவுமுறையைக் கடைபிடிப்பது, குறைந்தபட்சம் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவது, புகைபிடித்தல், குடிப்பதை நிறுத்துதல் மற்றும் ஜங்க் ஃபுட், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும்” என்று டாக்டர் ஸ்மிதா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“