Few tips that will help you find the perfect bra: உள்ளாடைகள் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. அதுவும் பெண்களுக்கு ஒரு சிறந்த ஆடையை அழகாக்க தேவையான மிக முக்கியமான அடித்தளம் உள்ளாடையாகும். பெண்கள் சரியான ப்ராவைத் தேர்ந்தெடுப்பது முக்கியம், அது உங்கள் உடல் வடிவத்தை சரியாக வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அதிக வசதியும் உங்களுக்கு பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும்.
மார்க்ஸ் & ஸ்பென்சரின் டெக்னிக்கல் மேனேஜர் மற்றும் ப்ரா ஃபிட் நிபுணரான ஜூலியா மெர்சர் மற்றும் க்ளோவியாவின் நிறுவனர் நேஹா காந்த், சரியான ப்ராவை எப்படி வாங்குவது என்பது குறித்த உதவிக்குறிப்புகளை பட்டியலிட்டுள்ளனர்:
சரியான பொருத்தம் (பெர்ஃபக்ட் ஃபிட்): உங்கள் மார்பகங்களின் அளவும் வடிவமும் உங்கள் பெர்ஃபக்ட் ஃபிட் ப்ராவின் வடிவம் மற்றும் அளவைத் தேர்ந்தெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், ஒரு தொழில்முறை ப்ரா பொருத்தத்திற்கு நேரத்தை செலவிடுங்கள். உங்களிடம் பெர்ஃபக்ட் ஃபிட் ப்ரா இருந்தால் நல்லது, ஏனெனில் நீங்கள் அதை அணிந்திருக்கும் உணர்வே உங்களுக்குத் தெரியாது.
வாங்குவதற்கு முன் அணிந்து பார்க்கவும்: எந்த வடிவம் உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள, வெவ்வேறு ப்ராக்களை அணிந்து பார்க்கவும். உங்கள் ப்ரா ஒரு இறுக்கமான பொருத்தமாக இருக்க வேண்டும், ஆனால் அழுத்தம் கொடுக்க கூடாது. ப்ராக்களில் உள்ள அண்டர்வயர் உங்கள் மார்பை அழுத்தவோ அல்லது உங்கள் தோலை கிள்ளவோ இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். இல்லையென்றால் அளவை மாற்றி முயற்சிக்கவும்.
ப்ராவின் பட்டை முக்கியம்: உங்கள் ப்ரா பட்டைகள் மிகவும் தளர்வாகவோ அல்லது இறுக்கமாகவோ இருக்கக்கூடாது, மேலும் நீங்கள் விரும்பிய அளவிற்கு ஏற்றவாறு சரிசெய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.
ஃபிட் கப்: ப்ரா கப்கள் சீராக இருக்க வேண்டும் மற்றும் கப்களின் மேல் எந்த வீக்கமும் இல்லாமல், சரியான பொருத்தம் இருக்கும் போது விளிம்புகள் உங்கள் மார்புக்கு எதிராக தட்டையாக இருக்க வேண்டும். உங்களிடம் சரியான கப் அளவு உள்ளதா என்பதைக் கண்டறிய சிறந்த வழி, உங்கள் கைகளை உயர்த்தும்போது, ப்ரா சரியான இடத்தில் இருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: Chest Health: பெண்களுக்கு Bra அவசியமா? மருத்துவம் கூறுவது என்ன?
சரியான அளவு: பெரும்பாலான பெண்கள் செய்யும் பெரிய தவறு சரியான கப் அளவு கொண்ட ப்ரா அணியாமல் இருப்பதுதான். ப்ராவின் பட்டை அளவுகள் இரட்டை எண்களில் அளவிடப்படுகின்றன, நீங்கள் ப்ரா அணிந்தவுடன், நீங்கள் ப்ராவை 4-5 செமீ தொலைவில் பின்னால் இழுக்கும்போது சரியாக பொருந்தி விடும். கப்கள் உங்கள் மார்பகத்தை முழுமையாக கவர் செய்யுமாறு இருக்க வேண்டும். ஒரு நடைமுறையாக, ஒவ்வொரு ஆறு முதல் பன்னிரெண்டு மாதங்களுக்கும் உங்களை நீங்களே அளவிட்டு கொள்ளுங்கள், ஏனெனில் எடை இழப்பு மற்றும் அதிகரிப்பு ஆகிய இரண்டின் காரணமாக உங்கள் அளவு தொடர்ந்து மாறலாம். சரியான அளவு உள்ளதா என்பதை உறுதிசெய்ய, குறிப்பிட்ட இடைவெளியில் முழுப் பயிற்சி பெற்ற ப்ரா-பிட் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.
இடைவெளி முக்கியம்: உங்கள் மார்பகங்கள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக இருந்தால், மார்பகங்களுக்குள் இடைவெளி கிடைக்கும் மற்றும் முழுமையான தோற்றத்தை கொடுக்கும் சரியான ப்ராவை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் மார்பகங்கள் அகலமாக இருந்தால், அவற்றை சரியாக பொருத்தும் பக்க இணைப்பு கொண்ட ப்ரா உங்களுக்குத் தேவை. எனவே புஷ் அப் ப்ராவை பயன்படுத்தி பாருங்கள்.
ப்ரா கவரேஜ்: உங்களுக்கு உறுதியான மற்றும் பெரிய மார்பகங்கள் இருந்தால், முழு கவரேஜ் ப்ரா ஒரு நல்ல தேர்வாகும். இது மார்பக திசுக்களுக்கு முழு ஆதரவை அளிக்கிறது. உங்களிடம் சிறிய மார்பகங்கள் இருந்தால், அகலமான பட்டைகள் கொண்ட டெமி கப் ப்ரா அல்லது புஷ் அப் ப்ரா உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இது உங்கள் மார்பகங்களுக்கு தேவையான உந்துதலைக் கொடுப்பதோடு, வட்டமான தோற்றத்தையும் கொடுக்கும்.
சரியான ஸ்டைல்: பரந்த தோள்களைக் கொண்ட பெண்கள், நிலையான பிடிப்புக்காக அகலமான செட் பட்டைகள் கொண்ட பால்கனெட் ப்ராவை அணிய வேண்டும். ப்ரா பட்டைகள் தெரிவதைத் தவிர்க்க நீங்கள் ஒரு ரேசர்பேக் ப்ராவைத் தேர்வு செய்யலாம். குறுகிய தோள்களுடன் கூடிய பெண்கள் ரேசர்பேக் அல்லது மாற்றத்தக்க பட்டைகள் கொண்ட ப்ராக்களை அணியலாம். இது மார்பகங்களுக்கு முழு கவரேஜையும், பட்டைகளுக்கு ஒரு நிலையான பிடியையும் கொடுக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil