/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-01T163854.772.jpg)
masala meen kulambu in tamil:மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு வரிசையில் உள்ள மீன் குழம்புக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. இந்த மணமணக்கும் மீன் குழம்புகளில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஊர்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது.
இப்படியான டேஸ்டி மீன் குழம்புகளில் சுவை தரும் மீன்களை சேர்த்தால் அதன் சுவையே தனி தான். மீன் குழம்புகளில் ஒரு குறிப்பிட்ட மீன்களை சேர்ப்பதால் அவற்றுக்கு அந்த மீனின் பெயர்களே சூட்டப்படுகிறது. ஆனால், இன்று நாம் பார்க்கவுள்ள மசாலா மீன் குழம்பு, ஒரு மாறுபட்ட ரகம் ஆகும்.
இந்த மீன் குழம்பில் நீங்கள் எந்தவொரு மீனையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் நாம் சேர்க்கும் மசாலா தான் குழம்பின் ருசியையே தீர்மானிக்கும். அப்படியான "மசாலா மீன் குழம்பு" எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-01T162654.804.jpg)
மசாலா மீன் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
புளி – 150 கிராம்
இஞ்சி சிறிதளவு
பூண்டு – 10 பல்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
மிளகு – 1/4 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் – 4 ஸ்பூன்,
உப்பு
எண்ணெய் – 100 கிராம்
கடுகு – 1/2 ஸ்பூன்
வடகம் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழை
மசாலா மீன் குழம்பு சிம்பிள் டிப்ஸ்
பொதுவாக, மீன் குழம்பு தயார் செய்ய புளி ஒரு முக்கிய மூல பொருளாக உள்ளது. எனவே, அவற்றை முதலில் மறவாமல் எடுத்து, நன்கு ஊறவைத்து, கரைத்து, புளிக்கரைசலாக எடுத்துக்கொள்ளவும்.
இந்த புளிக்கரைசலுடன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து தனியாக வைக்கவும்.
பிறகு, 5 சின்ன வெங்காயம், 2 பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக்கொள்ளவும்.
இதன் பிறகு மீதமுள்ள 5 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்ட இஞ்சி, சோம்பு, சீரகம், மிளகு, மிளகாய்த்தூள், உப்பு, தனியா தூள் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை ஆகியவற்றை எடுத்து, மிக்சியில் இட்டு பேஸ்ட் போன்ற பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
இப்போது, ஒரு பாத்திரத்தை எடுத்து தணலில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றவும்.
அவை காய்ந்ததும், அதில் கடுகு மற்றும் வடகம் சேர்த்து தாளிக்கவும்.
தொடர்ந்து இரண்டு வரமிளகாய், தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு, முன்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இவை நன்கு வதங்கி வரும்போது அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து தொக்கு பதத்திற்கு வதக்கிக் கொள்ளவும்.
இவையும் நன்றாக வதங்கி பிறகு, அதனுடன் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாக கொதித்ததும் அவற்றுடன் மீன் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து, மூடியால் மூடி மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
இப்போது நீங்கள் மூடியை திறந்து பார்த்தால் டேஸ்டியான 'மசாலா மீன் குழம்பு' தயாராக இருக்கும். அவற்றை சூடான சாதத்துடன் சேர்த்து ருசித்து மகிழலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-01T163904.937.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.