வாரக் கடைசில சாப்பிட பாறை மீன் குழம்பு… முள்ளும் கம்மி, சுவையும் பிரமாதம்!
paarai fish kulambu making in tamil: வார கடைசில் சுவையான மீன் குழம்பு தயார் செய்ய நீங்கள் விருப்பினால் கண்ணை மூடிக்கொண்டு பாறை மீனை தேர்வு செய்து ருசிக்கலாம்.
paarai fish kulambu making in tamil: வார கடைசில் சுவையான மீன் குழம்பு தயார் செய்ய நீங்கள் விருப்பினால் கண்ணை மூடிக்கொண்டு பாறை மீனை தேர்வு செய்து ருசிக்கலாம்.
Fish Curry recipe in tamil: மீன் குழம்பு என்றாலே தனி ருசிதான். அதிலும் குழம்புக்கு சுவை கூட்டக்கூடிய மீன் குழும்புகள் என்றால் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான். அந்த வகையில், குழம்பு ஏற்ற மீனாக உள்ள பாறை மீனில் எப்படி குழம்பு வைப்பது என்று இங்கு பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 6 ஸ்பூன் வெந்தயம் - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் கருவேப்பிலை சின்ன வெங்காயம் - 10 - 12 பச்சை மிளகாய் - 4 (நடுவில் கீறியது) பூண்டு - 10 (தட்டியது) தக்காளி - 2 (நன்கு பழுத்தது மற்றும் கல் உப்பு சேர்த்து பிழிந்தது) மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் புளி - சுவைக்கேற்ப
முதலில் ஒரு மண்சட்டி அல்லது குழம்பு வைக்கும் பாத்திரம் எடுத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில், வெந்தயம், சோம்பு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து பூண்டு சேர்த்து நன்கு வதக்கிய பிறகு முன்பு கல் உப்பு சேர்த்து பிழிந்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். அதோடு, புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இதற்கிடையில், குழம்பிற்கு தேங்காயுடன் சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும். விருப்பம் இருந்தால் நீங்கள் தேங்காய் சேர்க்கலாம். இல்லையென்றால் தவிர்க்கலாம்.
குழம்பு ஓரளவிற்கு சுண்டிய பிறகு, நறுக்கி சுத்தமான தண்ணீரில் கழுவி வைத்துள்ள மீனை சேர்த்து கொள்ளலாம். அவற்றை மிதமான சூட்டில் 4 முதல் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு கீழே இறக்கி கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
வார கடைசில் சுவையான மீன் குழம்பு தயார் செய்ய நீங்கள் விருப்பினால் கண்ணை மூடிக்கொண்டு பாறை மீனை தேர்வு செய்து ருசிக்கலாம்.