/indian-express-tamil/media/media_files/AvNdCdNspw5heILWSRHj.jpg)
4 வாரத்தில் 8 இன்ச் தொப்பை குறைப்பு சாத்தியமா? நிபுணர்கள் விளக்கம்
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிக முக்கியமானது. ஆனால், உடலில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கொழுப்பை குறைக்கும் ஒரே ஒரு பயிற்சி உள்ளதா? இதற்கான பதிலைத் தேடி பார்த்தபோது, ஃபிட்னஸ் இன்ப்ளூயன்சர் தீப்தி தாக்கர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அப்படி ஒரு பயிற்சி இருப்பதாக கூறியிருந்தார்.
அந்த வீடியோவில் தாக்கர் கூறியதாவது: “நான் இந்த பயிற்சியை 4 வாரங்களாக செய்கிறேன். என் தொப்பை 8 இன்ச் வரை குறைந்துவிட்டது” என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த உடற்பயிற்சி வயிற்றை மட்டுமே பிரத்யேகமாக இலக்காகக் கொண்டது என்றும் அவர் கூறினார். “முதலில் கால்களை கீழே இருந்து தூக்கத் தொடங்குங்கள்; பின்னர் படிப்படியாக உயரத்திற்கு உயர்த்துங்கள்” என விளக்கத்தில் எழுதியுள்ளார். அந்த வீடியோவில், அவர் மாற்றி மாற்றி கால்களை தூக்கும் பயிற்சி செய்ததைக் காணலாம்.
மேலும் அறிய விரும்பியதால், நாங்கள் ஃபரிதாபாத்தில் உள்ள மெட்ரோ மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் உதித் கபூரைத் தொடர்பு கொண்டோம். அவர் இந்த கூற்றை மறுத்தார். தொங்கும் அல்லது முன்னோக்கி விரிந்த வயிறு என்பது வாழ்க்கை முறை காரணங்களால் ஏற்படுவதாகவும், அதற்கான சரியான தீர்வு என்பது, உடற்பயிற்சி, சத்தான உணவு பழக்கங்களால் மட்டுமே சாத்தியமாகும் எனவும் கூறினார்.
"குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பது என்பது பெரும்பாலும் கட்டுக்கதை; மாறாக, எடை இழப்பு, தசைகளை மேம்படுத்த ஒரு விரிவான அணுகுமுறை அவசியம். சரியான உணவுமுறை மற்றும் கார்டியோ பயிற்சிகளின் கலவை ஆகியவை குறிப்பிடத்தக்க மாற்றங்களை காண முக்கியமாகும்" என்று டாக்டர் கபூர் கூறினார். கொழுப்பைக் குறைக்க கலோரி பற்றாக்குறை தேவை (உதாரணமாக, ஒரு நாளைக்கு 2,000 கலோரிகளை உட்கொண்டால், நீங்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி மூலம் 2200-2500 கலோரிகளை எரிக்க வேண்டும்). இந்த உடற்பயிற்சி உங்கள் மைய வயிற்று தசைகளுக்கும்கீழ் வயிற்றுக்கு நல்லது, ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த ஒரு உடற்பயிற்சியால் மட்டும் 4 வாரங்களில் தொப்பை உங்களால் குறைக்க முடியாது" என்று டாக்டர் உதித் கபூர் கூறினார்.
உதய்பூரில் உள்ள பாரஸ் ஹெல்த்தின் மருத்துவ உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் டி.டி. ஆர்த்தி நாத் கூறுகையில், தொப்பை கொழுப்பைக் குறைப்பது பொதுவாக சமச்சீர் மற்றும் சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணிகளின் ஒருங்கிணைப்பை உள்ளடக்கியது என்றார்.
"உடலின் குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள கொழுப்பைக் குறைக்க எந்த ஒரு மந்திர தீர்வும் அல்லது விரைவான வழியும் இல்லை. உங்கள் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் இலக்குகளின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளை வழங்கக்கூடிய ஒரு தகுதியான சுகாதார நிபுணர் அல்லது பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணரை அணுகுவது அவசியம். அவர்கள் சமச்சீர் உணவு, பகுதி கட்டுப்பாடு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நீண்டகால எடை மேலாண்மைக்கு பயனுள்ள பிற வாழ்க்கைமுறை காரணி உள்ளிட்ட விரிவான திட்டத்தை உருவாக்க உதவ முடியும்" என்று ஆர்த்தி நாத் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.