நாம் நிற்கும், அமரும் அல்லது சில செயல்களை செய்யும்போது நம் உடலுக்கு தவறான அசைவு ஏற்பட்டு சியாட்டிகா அல்லது ஸ்கோலியோசிஸ் நிலை ஏற்படும். சியாட்டிகா என்பது சியாட்டிக் நரம்பு சுருக்கப்பட்ட அல்லது எரிச்சலடைந்து, காலுக்கு கீழே கூர்மையான வலி, கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு நிலையைக் குறிக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்:
You might end up with sciatica or scoliosis because of incorrect posture
டிஜிட்டல் க்ரியேட்டர் ஷிவம் அஹ்லாவத் என்பவர் இன்ஸ்டாகிராமில் ஒரு ரீலைப் பகிர்ந்து அதில் பலருக்கும் ஏற்படும் கால் வலிக்குப் பின்னால் உள்ள மறைக்கப்பட்டபிரச்சனையை பற்றி விவரித்துள்ளார்.
அந்த வீடியோவில் உள்ள முதல் நிகழ்வில், அவர் நிற்கும் போது அனைத்து எடையையும் ஒரு காலில் வைக்கிறார், இரண்டாவது நிகழ்வில், அவர் ஒரு தட்டையான மேற்பரப்பில் (இந்த சூழலில், ஒரு மேஜை) கையை முட்டுக்கொடுத்து நிற்பதைக் காணலாம், மீதமுள்ள எடை அவரது இடுப்பில் உள்ளது.
வீடியோவின் தலைப்பில், அஹ்லாவத், "எல்லாம் நன்றாக இருக்கும் வரை, நாம் எந்த வலியையும் உணர மாட்டோம், ஆனால் சிறிது நேரம் கழித்து, ஏதாவது உணர்வு ஏற்படும்போது, வலியைத் தவிர வேறு எதுவும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு வழிகளும் சியாட்டிகா மற்றும் ஸ்கோலியோசிஸுக்கு எவ்வாறு வழிவகுக்கும் என்று பார்ப்போம். இதனை பற்றி புரிந்து கொள்ளவும் வழிகளைக் கண்டறியவும் Indianexpress.com ஒரு சுகாதார நிபுணரிடம் பேசினோம், அதன்படி,
"எடையை சீரற்ற முறையில் மாற்றுவது அல்லது அதிகப்படியாக இடுப்பை முன்னோக்கி சாய்த்த நிலையில் வைத்திருப்பது போன்ற முறையற்ற நிலைப்பாடு சியாட்டிக் நரம்பை சுருக்கி, சியாட்டிகாவுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள்.
இது கீழ் முதுகில் இருந்து கால்கள் வரை வலியை உணர்த்தி வகைப்படுத்தப்படும் ஒரு வலி நிலை" என்று ஹோலிஸ்டிகா வேர்ல்டின் நிறுவனரும் இயக்குநருமான டாக்டர் தர்மேஷ் ஷா கூறினார்.
மோசமான நிலைகள், குறிப்பாக சமச்சீரற்ற நிற்கும் நிலைகள், ஸ்கோலியோசிஸுக்கு (முதுகெலும்பின் வளைவு) பங்களிக்கக்கூடும், சீரற்ற தசை அழுத்தம் காரணமாக காலப்போக்கில் மோசமடைகிறது.
சியாட்டிகா மற்றும் ஸ்கோலியோசிஸ் என்றால் என்ன?
சியாட்டிகா என்பது சியாட்டிக் நரம்பு சுருக்கப்பட்ட அல்லது எரிச்சலடைந்து, காலுக்கு கீழே கூர்மையான வலி, கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை ஏற்படுகிறது. இது இயக்கம் மட்டுப்படுத்தும் மற்றும் நாள்பட்ட வலிக்கு வழிவகுக்கும்.
ஸ்கோலியோசிஸ், மறுபுறம், முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவு ஆகும், இது முதுகுவலி, நுரையீரல் திறன் குறைதல் மற்றும் தோரணை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கடுமையான நிகழ்வுகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்றும் கூறுகின்றனர்.
அத்தகைய வலியைத் தடுக்க நிற்க சிறந்த வழியாக பின்வரும் 4 உதவிக்குறிப்புகளை டாக்டர் ஷா பரிந்துரைத்துள்ளார்,
இரண்டு கால்களிலும் எடையை சமமாக விநியோகித்தல்
நடுநிலை இடுப்பு நிலையை பராமரித்தல்
உங்கள் முதுகெலும்பு சீரமைக்கப்பட்டு, தோள்கள் பின்னால் மற்றும் கன்னம் மட்டத்தில் வைத்தல்
உங்கள் முழங்கால்களை மடக்கி வைப்பதை தவிர்த்து, நல்ல தளர்வாக அவ்வப்போது வைத்தல் போன்ற பயிற்சிகளை தவறாமல் பயிற்சி செய்யுங்கள்.
இதுமாதிரியான செயல்கள் நீண்டகால நாள்பட்ட வலியை ஏற்படுத்தாது என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“