/indian-express-tamil/media/media_files/2025/05/21/PvUEoBarMKgDrYA8EXty.jpg)
தினமும் 10 முறை இப்படி உட்கார்ந்து எந்திரிங்க… ஊளை சதை கரையும்; டாக்டர் கார்த்திகேயன்
பலருக்கு ஒரு பெரிய கவலையாக இருக்கும் தொப்பை கொழுப்பு, உங்களுக்குப் பிடித்த ஆடை அணிவதை கடினமாக்கும். அது மட்டுமல்லாமல், இதய நோய், நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்னைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும். எனவே, அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எடையைக் குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று உடற்பயிற்சி செய்வது, மேலும் தொப்பை கொழுப்பைக் குறைப்பதற்காக ஸ்குவாட்ஸ் செய்வது உதவும். ஸ்குவாட்ஸ் என்பது சக்திவாய்ந்த, முழு உடல் பயிற்சியாகும், பல தசை குழுக்கள் ஒரே நேரத்தில் ஈடுபடுத்துகிறது, அவை எடை இழப்புக்கு ஏற்றதாக அமைகிறது. உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் ஸ்குவாட்ஸ் சேர்ப்பது உங்கள் உடலை மாற்றும், கொழுப்பு இழப்பை ஆதரிக்கும் மற்றும் வலிமையை மேம்படுத்தும்.
உடல் ஆரோக்கியமாக இருக்க தினசரி உடற்பயிற்சி மிக அவசியம் என்ப நமக்குத் தெரியும். ஆண், பெண் இருவரும் செய்யக்கூடிய சில தினசரி பயிற்சிகள் இருக்கின்றன. அதில் ஸ்குவாட் பயிற்சிகள் மிக முக்கியமானவை. ஸ்குவாட்ஸ் நம்ம ஊரில் தோப்புக்கரணம்தான் இது. குந்தவைத்து அமர்ந்த நிலையிலிருந்து எழுந்து மீண்டும் அதே நிலைக்கு வரும் பயிற்சி. அவை உங்கள் ஸ்குவாட்ஸ், க்ளூட்ஸ், ஹாம்ஸ்ட்ரிங்ஸ், கெண்டைக்கால் மற்றும் கோர் ஆகியவற்றை உறுதியாக்குகின்றன. அதே சமயம் மூட்டுவலி, தசை விலகல் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.
ஸ்குவாட்ஸ் பயிற்சிகளை ஆண், பெண் இருவருமே செய்யக்கூடிய பயிற்சி தான். அதில் பெண் உடலைக் காட்டிலும் ஆண் உடல் வாகுக்கு ஏற்ற மிகச்சிறந்த பயிற்சியாக ஸ்குவாட்ஸ் பயிற்சி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆண்களுக்கு பல வழிகளில் ஆரோக்கிய மாற்றங்களைத் தரக்கூடியது இந்த ஸ்குவாட்ஸ் பயிற்சி. இதுகுறித்து மருத்துவர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளதாவது, கோர் பகுதி தசை அமைப்புகளுக்கு மிக முக்கியாமான பயிற்சிதான் ஸ்குவாட்ஸ். எந்தவொரு உடற்பயிற்சி செய்தாலும், கோர் தசை பகுதியை சிறிதளவு உள்ளே இறுக்கிக் கொண்டு பயிற்சி செய்ய வேண்டும். ஒரு நாளை 10 முறை என ஸ்குவாட்ஸ் பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், உடலில் இருக்கக் கூடிய ஊளை சதை (தேவையற்ற கொழுப்பு) கரையும் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.