இந்தியாவில் உடல் பருமனாவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல் எடை அதிகரித்தவர்கள் எடை இழப்புக்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். நம்மில் பலர் எடை இழப்புக்காக சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியைப் பின்பற்றினாலும் அவர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறாமல் இருக்கலாம். இதுபோன்ற கடுமையான வழக்கத்தை விட்டுவிட்டால் மீண்டும் எடை அதிகரிக்கிறது.
ஒருவர் எடை இழப்புக்கான முயற்சியை சரியான வழியில் செய்யாததே எடை குறைக்க முடியாததற்க்கான காரணமாக இருக்கலாம் என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கூறுகிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ஒருவரின் உடல் எடை மற்றும் உடற்பயிற்சி அளவை அளவிடுவதற்கான சரியான வழியை ருஜூதா திவேகர் விளக்குகிறார்.
உடல் எடை என்பது கொழுப்பு உடல் எடை மற்றும் மெலிந்த உடல் எடை ஆகியவற்றை உள்ளடக்கியது. நாம் வயதாகும்போது, அதிக கொழுப்பு எடையும், குறைந்த மெலிந்த உடல் எடையும் சுமக்கத் தொடங்குகிறோம், என்று அவர் கூறுகிறார். எடை இழப்பு உணவுகள் நம் உடலுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டியுள்ளனர். உடல் எடையை குறைப்பதற்கான சரியான வழி ஒரு நிலையான அணுகுமுறையை பின்பற்றுவதாகும். இந்த வழியில், நீங்கள் இழக்கும் எடை, ஒருபோதும் திரும்பி வராது.
உடல் எடை என்பது கொழுப்பின் அளவீடு அல்ல, மேலும் அது நிச்சயமாக உடற்திறன் அளவீடும் அல்ல என்று ஊட்டச்சத்து நிபுணர் ருஜூதா திவேகர் கூறுகிறார். எனவே, உங்கள் எடையை ஒரு எடை அளவில் அளவிடுவது துல்லியமானது அல்ல, ஏனெனில் இது மெலிந்த உடல் எடைக்கும் கொழுப்பு எடைக்கும் உள்ள வித்தியாசத்தை உங்களுக்குக் கூறாது, என்றும் ருஜூதா திவேகர் கூறுகிறார்.
உங்கள் கொழுப்பு எடை குறையும் போது, உங்கள் மெலிந்த உடல் எடை அதிகரிக்கிறது என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். திவேகரின் கூற்றுப்படி, உங்கள் மெலிந்த உடல் எடை அதிகரிக்கும் என்று சொல்லும் மூன்று அளவுருக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இடுப்பிற்கான இடை விகிதம்
உங்கள் இடுப்பின் குறுகிய பகுதியான, உங்கள் தொப்புளுக்கு மேலே இரண்டு முதல் மூன்று விரல்கள் அளவுக்கு மேலே, ஒரு எளிய அளவிடும் நாடாவைப் பயன்படுத்தி, உங்கள் இடுப்பு அளவை அளவிடவும்.
இடுப்பு அளவிற்கு, உங்கள் இடுப்பின் பரந்த பகுதியை அளவிடவும். அளவீடுகளை குறித்துக் கொள்ளுங்கள். சிறந்த இடுப்பிற்கான இடை விகிதம் பெண்களுக்கு 0.7 முதல் 0.85 வரை மற்றும் ஆண்களுக்கு 0.85 முதல் 1 வரை.
உட்கார்ந்து கால்விரல்களை தொடும் சோதனை
ஒரு நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்து, உங்கள் கால்களை மேல்நோக்கி சுட்டிக்காட்டி உங்கள் கால்களை நேராக வைத்திருங்கள். நேராகப் பார்த்து, உங்கள் கால்களை தொட உங்கள் உடலை வளைக்கவும். உங்கள் கால்விரல்களைத் தொட முடிந்தால், எடுக்கப்பட்ட அளவு பூஜ்ஜியமாகும். உங்கள் கணுக்கால் வரை மட்டுமே நீங்கள் தொட முடிந்தால், அளவு எதிர்குறி மதிப்பில் கணக்கிடப்படும்.
ஓய்வின்போது இதய துடிப்பு
காலையில் எழுந்து உங்கள் விரலில் ஒரு ஆக்சிமீட்டரை வைக்கவும். ஆக்சிமீட்டரில் வரும் அளவு உங்கள் ஓய்வெடுக்கும் இதய துடிப்பின் சராசரியாகக் கருதலாம். மேலும், படுக்கையில் இருந்து எழுந்திருக்குமுன் உங்கள் துடிப்பை நீங்கள் சரிபார்க்கலாம்.
எனவே உடல் எடைக்குறைப்பை முறையான பயிற்சிகளைக் கொண்டு செய்வது மிக அவசியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil