சரியான முறையில் உணவுகளை எடுத்துக் கொண்டாலும், சீரான உடற்பயிற்சிகள் மேற்கொண்டாலும் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று கவலைப்படுபவரா நீங்கள்? அப்போது, வல்லுநர்கள் பரிந்துரைக்கும் இந்த டிப்ஸ்களை தினசரி காலை எழுந்ததும் பின்பற்றி பாருங்கள்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 5 things to do immediately after waking up to lose weight faster, according to doctors
1. காலை நேரத்தை தண்ணீருடன் தொடங்குங்கள்:
காலை எழுந்ததும் டீ அல்லது காபி போன்றவற்றை அருந்துவதற்கு பதிலாக தண்ணீர் குடித்து பழகுங்கள். செரிமானத்திற்கும், உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றவும் தண்ணீர் மிக அவசியம். தண்ணீருடன் எலுமிச்சை, பெர்ரீஸ் மற்றும் புதினா போன்றவற்றை சேர்த்து பருகலாம்.
2. மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம்:
காலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பாக சுமார் 5 முதல் 10 நிமிடங்களுக்கு மூச்சுப் பயிற்சி செய்யலாம். இதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். மேலும், சில யோகா பயிற்சிகளை செய்யும் போது, உடற்பயிற்சியில் ஏற்படும் காயங்களை தடுக்க உதவும்.
3. வேகமான நடைபயிற்சி போன்ற கார்டியோ செய்யலாம்:
காலை உணவுக்கு முன்பாக சுமார் 20 நிமிடங்களுக்கு வேகமான நடைபயிற்சி செய்யலாம். இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. மேலும், காலை நேரத்தில் இந்த நடைபயிற்சியை சூரிய வெளிச்சத்தில் செய்வது மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும்.
4. புரதம் நிறைந்த காலை உணவு அவசியம்:
சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பழச்சாறுகளுக்கு பதிலாக புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட பொருட்களை காலை நேரத்தில் சாப்பிடலாம். முட்டை, தானிய டோஸ்ட் மற்றும் அவகேடோ போன்றவற்றை சாப்பிடலாம். புரதம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன், நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும்.
5. சாப்பிட்ட பின்னரும் நடைபயிற்சி அவசியம்:
சாப்பிட்ட உடன் அமர்ந்து இருக்காமல் சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு மெதுவாக நடைபயிற்சி செய்யலாம். இது ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் உதவியாக இருக்கும். இது போன்ற பயிற்சிகளை தினசரி செய்யும் போது பலன் அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.