மாதவிடாய்யின் போது தொடை, வயிறு, முதுகில் வலி ஏற்படுவது இயல்பானது என்றும் வலியைத் தவிர்த்து இயல்பாக இருக்க 5 ஈஸி வழிகளை பின்பற்றலாம் என்று சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் ஸ்வேதா.
- மாதவிடாய் வலியைக் குறைத்தல்
மாதவிடாய்யின் போது தொடை, வயிறு மற்றும் கீழ் முதுகில் லேசானது முதல் கடுமையான வலியை உணருவது இயல்பானது. இது முதன்மை டிஸ்மெனோரியா அல்லது மாதவிடாய் பிடிப்புகள் என்று அழைக்கப்படுகிறது. மாதவிடாய் தொடங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு மாதவிடாய் வலி ஏற்படுகிறது. சில பெண்களுக்கு சிறிய அறிகுறிகள் மட்டும் தெரியும். மற்ற சிலருக்கு கடுமையான தலைவலி, தலைச்சுற்றல், வாதி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். லேசான மாதவிடாய் வலி இருந்தால், இதைச் செய்யலாம்.
• லாவெண்டர் மற்றும் கிளாரி சேஜ் எண்ணெய் சேர்த்து எஃசேம் உப்பு குளியல் எடுத்துக் கொள்ளலாம்.
• ஜோஜோபா மற்றும் கிளாரி சேஜ் எண்ணெய் சேர்த்து வயிற்றில் மசாஜ் செய்யலாம்.
• தசைப்பிடிப்புகளுக்கு எளிய உடற்பயிற்சி செய்யலாம்.
• மசாஜ் செய்துகொள்ளலாம்
- வயிறு உப்பியிருத்தல் போன்ற உணர்வு
மாதவிடாய்யின் போது வயிறு உப்பியிருத்தல் போன்ற உணர்வு ஏற்படும். எடை அதிகரித்தது போலும் வயிறு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வும் ஏற்படும். இதைக் குறைக்க செய்யவேண்டியவை
• தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
• பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். புரதம், நார்ச்சத்து, வைட்டமின், தாடிதுக்கள் நிறைந்த உணவு எடுத்துக் கொள்ளலாம்.
• காபியை தவிர்க்கவும். பதிலாக, கெமோமில், இஞ்சி டீ எடுத்துக் கொள்ளலாம்.
• நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
• உடற்பயிற்சி, யோகா செய்யலாம்.
- டார்க் சாக்லேட் சாப்பிடலாம்
மாதவிடாய் நாட்களில் தினமும் 40-120 கிராம் டார்க் சாக்லேட் சாப்பிடுவது அசௌகரியத்தைக் குறைக்க உதவும் என்கிறார் மருத்துவர் ஸ்வேதா.
டார்க் சாக்லேட்டில் அதிக மெக்னீசியம் செறிவு இருப்பதால், இது மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும். மேலும், மெக்னீசியம் தசை பிடிப்புகளிலிருந்து விடுபட உதவுகிறது.
- மாதவிடாய்யின் போது பிறப்புறுப்பு பகுதி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் மாதவிடாய்யின் போது பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் துர்நாற்றம் இயல்பு என்றும் மருத்துவர் கூறுகிறார். வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம், சோப்பை தவிர்க்க வேண்டும். சோப்பு பயன்படுத்துவது எரிச்சலூட்ட செய்யும் என்றும் கூறினார்.
- சானிட்டரி நாப்கின் பயன்பாடு
அசௌகரியமாக உணர்ந்தாலோ அல்லது துர்நாற்றம் கண்டாலோ சானிட்டரி நாப்கினை மாற்ற வேண்டும். சோப்பு பயன்படுத்தி கைகளை நன்கு கழுவவும். எட்டு மணி நேரம் மட்டுமே ஒரு நாப்கினை பயன்படுத்த வேண்டும். அதன்பின் மாற்றிவிட வேண்டும். மென்சுரல் கப் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்று மருத்துவர் ஸ்வேதா கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.